Home நாடு பிகேஆர் உதவித் தலைவர் தியான் சுவா உட்பட பக்காத்தான் தலைவர்கள் மூவர் கைது! (விரிவாக)

பிகேஆர் உதவித் தலைவர் தியான் சுவா உட்பட பக்காத்தான் தலைவர்கள் மூவர் கைது! (விரிவாக)

802
0
SHARE
Ad

Tian Chuaகோலாலம்பூர், மே 23 – பிகேஆர் உதவித் தலைவர் தியான் சுவா மற்றும் ஏபியு (Anything but Umno) தலைவர் ஹரீஸ் இப்ராகிம் ஆகிய இருவரும் இன்று மதியம் வெவ்வேறு இடங்களில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களையடுத்து  பாஸ் கட்சியைச் சேர்ந்த தம்ரின் கப்பாரும் பங்சாரில் வைத்து கைது செய்யப்பட்டார். தம்ரின் முன்னாள் துணைப் பிரதமர் அப்துல் கபார் பாபாவின் புதல்வர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்கள் மூவரும் மே 13 ஆம் தேதி நடந்த தேர்தல் முறைகேடுகள் தொடர்பான  கருத்தரங்கில் கலந்து கொண்டு அரசாங்கத்திற்கு எதிராகப் பேசியதற்காக இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

#TamilSchoolmychoice

கோலாலம்பூர் குறைந்த கட்டண (low-cost carrier terminal)  விமானநிலையத்தில் பாதுகாப்புச் சோதனைக்கு முன்னதாக தான் கைது செய்யப்பட்டதாக தியான் சுவா தனது டிவிட்டர் வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

அதோடு தான்  தேச நிந்தனைச் சட்டம் 4(1) பிரிவின் கீழ் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் தியான் அதில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ஹரீஸ் இப்ராகிம் கைது தொடர்பாக பிஎஸ்எம் கட்சியின் பொதுச்செயலாளர் எஸ்.அருட்செல்வன் கூறுகையில், ஹரீஸ் இப்ராகிம் தனது நண்பர்களுடன் செகாம்புட்டில் மதிய உணவு அருந்திக் கொண்டிருந்த போது 5 காவல்துறையினர் அவரைக் கைது செய்ததாகத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், பொதுத்தேர்தலில் சுங்கை ஆச்சே தொகுதியில் பிகேஆர் சார்பாகப் போட்டியிட்ட Solidariti Anak Muda Malaysia (SAMM) என்ற அமைப்பின் தலைவர் பத்ருல் ஹிசாம் ஷஹாரின் தனது டிவிட்டர் வலைத்தளத்தில், காவல்துறையைச் சேர்ந்த குழு ஒன்று சிரம்பானில் உள்ள தனது வீட்டிற்குச் சென்று விசாரித்திருப்பதாகத் தகவல் தெரிவித்துள்ளார்.

மே 13 ஆம் தேதி நடைபெற்ற கருத்தரங்கில் பேசிய பக்காத்தான் தலைவர்களுள் பத்ருல் ஹிசாமும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.