கோலாலம்பூர் : நடந்து முடிந்த பிகேஆர் கட்சித் தேர்தல்களில் பத்து தொகுதியில் அதன் தலைவரான தியான் சுவாவைத் தோற்கடித்திருக்கிறார் அந்தத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரான பிரபாகரன்.
517 வாக்குகள் பிரபாகரன் பெற்ற வேளையில் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட தியான் சுவா 306 வாக்குகளை மட்டுமே பெற்றார்.
தியான் சுவா பத்து தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமாவார்.
2018 பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்குத் தகுதியிழந்தவராக தியான் சுவா அப்போது அறிவிக்கப்பட்டார். அந்தத் தேர்தலில் அதே பத்து தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட்டார் பிரபாகரன். பிரச்சாரத்தின்போது தங்களின் ஆதரவை பிரபாகரனுக்கு பிகேஆர் தலைமைத்துவம வழங்கியது.
தியான் சுவா பிகேஆர் கட்சியின் நடப்பு உதவித் தலைவருமாவார்.