Home நாடு ரபிசி ரம்லி பிகேஆர் புதிய துணைத் தலைவராக கட்சிக்கு எழுச்சியூட்டுவாரா?

ரபிசி ரம்லி பிகேஆர் புதிய துணைத் தலைவராக கட்சிக்கு எழுச்சியூட்டுவாரா?

586
0
SHARE
Ad

கோலாலம்பூர் : பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பிகேஆர் கட்சியின் துணைத் தலைவருக்கான தேர்தலில் ரபிசி ரம்லி மிகப் பெரிய பெரும்பான்மையில் வெற்றி பெற்றுள்ளார்.

அதிகாரத்துவ முடிவுகள் அடுத்த மாதம்தான் அறிவிக்கப்படும் என்றாலும், இதுவரை அறிவிக்கப்பட்ட வாக்குகளில் 67,895 வாக்குகளை ரபிசி பெற்றிருக்கிறார். சைபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் 48,797 வாக்குகளை மட்டுமே பெற்றிருக்கிறார்.

இந்த வெற்றியின் மூலம் ரபிசி சோர்வடைந்திருந்த பிகேஆர் கட்சிக்கு, புதிய இரத்தத்தையும், எழுச்சியையும் பாய்ச்சியிருக்கிறார்.

#TamilSchoolmychoice

பொதுமக்களிடையே அவர் மீது இருக்கும் செல்வாக்கு, நம்பிக்கை, ஆதரவு ஆகியவற்றின் மூலம் எதிர்வரும் பொதுத் தேர்தலில் பிகேஆர் மேலும் கூடுதலான வாக்காளர்களின் ஆதரவைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் பிகேஆர் வெறும் குடும்பக் கட்சி அல்ல – யார் வேண்டுமானாலும் கட்சியின் உயர்மட்டப் பதவிகளுக்கு வரலாம் – என்ற தோற்றத்தையும் மக்களிடையே ரபிசியின் வெற்றி விதைத்திருக்கிறது.