Home நாடு தியான் சுவா : பொதுத் தேர்தலுக்குப் பின்னர் அவரின் நிலையைப் பரிசீலிப்போம் – ரபிசி கூறுகிறார்

தியான் சுவா : பொதுத் தேர்தலுக்குப் பின்னர் அவரின் நிலையைப் பரிசீலிப்போம் – ரபிசி கூறுகிறார்

284
0
SHARE
Ad

கோலாலம்பூர் : கூட்டரசுப் பிரதேசத்திலுள்ள பத்து நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் 10 வேட்பாளர்களில் பிகேஆர் கட்சியின் முன்னாள் உதவித் தலைவர் தியான் சுவாவும் ஒருவர்.

அவரின் முடிவைத் தொடர்ந்து இயல்பாகவே அவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டவராகக் கருதப்படுவார் என தம்பூனில் பத்திரிகையாளர்களிடம் பேசிய டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் கூறியிருந்தார்.

ஆனால் அதற்கு நேர் எதிர் மாறாக, பொதுத் தேர்தலுக்குப் பின்னர் தியான் சுவா பிரச்சனையைப் பரிசீலிப்போம் என பிகேஆர் கட்சியின் துணைத் தலைவர் ரபிசி ரம்லி தெரிவித்திருக்கிறார்.

#TamilSchoolmychoice

இதிலிருந்து தியான் சுவா தப்பித் தவறி பத்து தொகுதியில் வெற்றி பெற்றால் அவர் பக்காத்தான் கூட்டணியில் மீண்டும் சேர்த்துக் கொள்ளலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.