Home நாடு தம்பூன் : அன்வார் – அகமட் பைசால் – 4 முனைப் போட்டி

தம்பூன் : அன்வார் – அகமட் பைசால் – 4 முனைப் போட்டி

402
0
SHARE
Ad

ஈப்போ : அனல் பறக்கும் தொகுதிகளில் ஒன்றான பேராக், தம்பூன் தொகுதியில் 4 முனைப் போட்டி நிலவுகிறது. பிகேஆர்-நம்பிக்கைக் கூட்டணி சார்பில் அன்வார் இப்ராகிம் போட்டியிட அவரை எதிர்த்து நடப்பு நாடாளுமன்ற உறுப்பினர் அகமட் பைசால் அசுமு மோதுகிறார். அவர்கள் இருவருக்கும் இடையிலான போட்டிதான் முக்கியமாகப் பார்க்கப்படுகிறது.

எனினும் தேசிய முன்னணி சார்பில் தொகுதி அம்னோ தலைவர் டத்தோ அமினுடின் முகமட் ஹானாபியாவும், பெஜூவாங் கட்சியின் சார்பில் அப்துல் ரஹிம் தாஹிரும் போட்டியிடுகின்றனர்.

அம்னோ வேட்பாளர் அமினுடின் உலு கிந்தா சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் உறுப்பினராவார். 14-வது பொதுத் தேர்தலில் அவர் பிகேஆர் கட்சியின் முகமட் அராபாட் வரிசை முகமட்டிடம் அந்தத் தொகுதியில் தோல்வியடைந்தார்.

சட்டமன்றத் தொகுதிகளில் 2 முனைப் போட்டி

#TamilSchoolmychoice

தம்பூன் தொகுதியின் கீழ் வரும், மஞ்சோய், உலு கிந்தா ஆகிய இரண்டு தொகுதிகளிலும் மும்முனைப் போட்டிகள் ஏற்பட்டிருக்கின்றன.

மஞ்சோய் தொகுதியில் அமானா போட்டியிடுகிறது. பேராக் அமானா தலைவர் டத்தோ அஸ்முனி அவி இங்கு வேட்பாளராக நிறுத்தப்பட்டிருக்கிறார். அவர் நடப்பு மஞ்சோய் தொகுதியின் நடப்பு சட்டமன்ற உறுப்பினருமாவார்.

அவரை எதிர்த்து டத்தோ அசிசுல் காமா அப்துல் அசிஸ் அம்னோ சார்பில் போட்டியிடுகிறார். பாஸ் கட்சியின் சார்பில் ஹாபிஸ் சாப்ரி போட்டியிடுகிறார்.

உலு கிந்தா சட்டமன்றத் தொகுதியின் நடப்பு உறுப்பினரான முகமட் அராபாட் பிகேஆர் சார்பில் மீண்டும் போட்டியிடுகிறார். அம்னோவின் சார்பில் டத்தோ மஸ்லான் அப்துல் ரஹ்மான் வேட்பாளராக நிறுத்தப்பட்டிருக்கிறார். பெர்சாத்து சார்பில் புத்திரி ஹோலிஜா முகமட் ராலி போட்டியிடுகிறார். எஸ்.முருகையா என்ற சுயேட்சை வேட்பாளரும் போட்டியிடுகிறார்.

தம்பூர் நாடாளுமன்றத் தொகுதியில் பதிவு பெற்ற 160,558 வாக்காளர்கள் இருக்கின்றனர்.