Home இந்தியா ‘மோடி என்றாலே பா.ஜனதா தலைவர்களுக்கு காய்ச்சல்’: காங்கிரஸ் கிண்டல்

‘மோடி என்றாலே பா.ஜனதா தலைவர்களுக்கு காய்ச்சல்’: காங்கிரஸ் கிண்டல்

580
0
SHARE
Ad

புதுடெல்லி, ஜூன் 8- கோவா தலைநகர் பனாஜியில்இன்று (சனிக்கிழமை) தொடங்குகிற பாரதீய ஜனதா தேசிய செயற்குழு கூட்டத்தில், நரேந்திரமோடிக்கு முக்கிய பதவி வழங்கப்படுவது குறித்து அறிவிப்பு வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இந்த கூட்டத்தில் உடல் நலக்குறைவால் அத்வானி கலந்துகொள்வாரா என்பது உறுதியாக தெரியவில்லை.

modiமூத்த தலைவர்கள் உமாபாரதி, ஜஸ்வந்த்சிங், ரவிசங்கர்பிரசாத், சத்ருகன் சின்கா, வருண்காந்தி உள்ளிட்டவர்கள் தேசிய செயற்குழு கூட்டத்தில் பங்கேற்க மாட்டார்கள் என தகவல்கள் வெளியாகி உள்ளன. இதை காங்கிரஸ் கிண்டல் செய்துள்ளது.

அக்கட்சியின் மூத்த தலைவர் ரஷீத் ஆல்வி இதுபற்றி நிருபர்களிடம் கூறுகையில், ‘மோடியால், பாரதீய ஜனதாவின் பல தலைவர்கள் காய்ச்சலில் விழுந்து விடுகின்றனர். அவரால் நாட்டுக்கு என்ன நடக்கும் என்பதை அக்கட்சி தலைவர்கள் சிந்திக்க வேண்டும்.

#TamilSchoolmychoice

மோடியால் காய்ச்சலில் விழுந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்’ என்றார். காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ஷகீல் அகமதுவும், ‘பாரதீய ஜனதாவில் அத்வானி குழுவினரை மோடி குழுவினர் அடித்து சென்று விட்டனர்’ என்றார்.