Home கலை உலகம் தலைப்பு தேர்வில் இழுபறி: பெயரிடப்படாத அஜீத்தின் 2 படங்கள்

தலைப்பு தேர்வில் இழுபறி: பெயரிடப்படாத அஜீத்தின் 2 படங்கள்

609
0
SHARE
Ad

ஜூன் 8- அஜீத் நடிக்கும் இரண்டு படங்களுக்கு இன்னும் பெயர் வைக்க வில்லை. இதில் ஒரு படத்தின் படப்பிடிப்பு முடிந்தே விட்டது.

இந்த படத்தை விஷ்ணுவர்த்தன் இயக்கியுள்ளார். இதில் அஜீத் ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். ஆர்யா, டாப்சியும் உள்ளனர். இதன் படப்பிடிப்பு கடந்த வருடம் ஜூன் மாதம் துவங்கியது.

பெங்களூர், ஐதராபாத், மும்பை போன்ற பகுதிகளில் படப்பிடிப்பு நடந்தது. சண்டை காட்சியில் நடித்தபோது அஜீத்துக்கு காயம் ஏற்பட்டது.

#TamilSchoolmychoice

ajith-sliderஆனாலும் வலியை பொருட்படுத்தாமல் தொடர்ந்து நடித்து முடித்தார். இதன் முன்னனி காட்சிகளை  சமீபத்தில் வெளியிடப்பட்டது. இப்படத்துக்கு பெயர் வைக்காமலேயே இந்த முன்னனி காட்சிகளை வெளியீடு செய்தார்கள். ஆகஸ்டு மாதம் படத்தை வெளியீடு  செய்ய ஏற்பாடுகள் நடக்கின்றன.

‘வலை’ என்ற பெயரை படத்துக்கு சூட்ட இருப்பதாக செய்திகள் பரவின. இதனை இயக்குனர் மறுத்துள்ளார். தற்போது சிவா இயக்கும் படத்தில் அஜீத் நடிக்க துவங்கியுள்ளார்.

இதன் படப்பிடிப்பு துவங்கியுள்ளது. இந்த படத்துக்கும் இன்னும் பெயர் வைக்கவில்லை. பட தலைப்புகள் தேர்வில் இழுபறி நீடிப்பதாக கூறப்படுகிறது. இரு பட தலைப்புகளையும் அஜீத் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்க்கின்றனர்.