ஜூன் 18- இயக்குனர் பி.வாசு ஹாலிவுட்டில் ஆங்கில படம் இயக்குகிறார். இவர் தமிழில் மன்னன், சின்ன தம்பி, சந்திரமுகி உள்பட பல படங்கள் எடுத்துள்ளார். ஆங்கில படம் இயக்குவது குறித்து பி.வாசு கூறியதாவது:-
உங்கள் சந்திரமுகி படத்தை பார்த்தேன். அதேபோல் பேய் படம் ஒன்றை ஹாலிவுட்டில் தயாரிக்க உள்ளேன். அப்படத்தை நீங்கள்தான் இயக்க வேண்டும் என்றார். ராஜ்திருச்செல்வம் சொன்ன கதை வித்தியாசமாக இருந்தது. எனக்கு பிடித்தது. விஞ்ஞானமும் மெய்ஞானமும் கலந்த கதை.
பூமியை சுற்று சூழல் மாசு, எண்ணையை உறிஞ்சி எடுத்தல் என தொடர்ந்து காயப்படுத்துகின்றனர். இதனால் ஏற்படும் பின்விளைவுகளை மையப்படுத்தி இக்கதை உள்ளது. காதல், பேய், நகைச்சுவை, என அத்தனை விஷயங்களும் இருக்கும்.
இப்படத்துக்கு ‘கரி இன்லவ்’ என பெயரிட்டுள்ளோம். நமது பாணியில் பாடல் ஒன்றை இடம் பெற செய்யவும் யோசனை உள்ளது. படப்பிடிப்பு, மைசூர், கேரளா, காஞ்சீபுரம், ஹாலிவுட்டில் நடக்க உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
தயாரிப்பாளர் திருச்செல்வன் கூறும்போது, இந்த படத்தில் அனில் கபூர், சோனம்கபூர் மற்றும் அனகொண்டா படவில்லன் ஜான் ஒயிட் ஆகியோர் நடிக்கின்றனர். கதாநாயகனாக இந்தியாவை சேர்ந்தவர் நடிக்கிறார் என்றார்.