Home கலை உலகம் இயக்குனர் சங்க தேர்தல்: துணைத்தலைவர்களாக பி.வாசு, கே.எஸ்.ரவிக்குமார் தேர்வு

இயக்குனர் சங்க தேர்தல்: துணைத்தலைவர்களாக பி.வாசு, கே.எஸ்.ரவிக்குமார் தேர்வு

684
0
SHARE
Ad

ஜூன் 12- தமிழ்நாடு திரைப்பட இயக்குனர் சங்க தேர்தலில் விக்ரமன் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

p.vasuபொதுச் செயலாளராக ஆர்.கே.செல்வமணி வெற்றி பெற்றார். துணை தலைவர் பதவிக்கு விக்ரமன் அணி சார்பில் கே.எஸ்.ரவிக்குமார், பி.வாசு ஆகியோரும் விசு அணி சார்பில் அரவிந்த ராஜ், மங்கை அரிராஜன் ஆகியோரும் போட்டியிட்டனர்.

இவர்களுக்கான வாக்குகள் நேற்று இரவு எண்ணப்பபட்டன. இதில் கே.எஸ்.ரவிக்குமார் 880 வாக்குகளும், பி.வாசு 670 வாக்குகளும் பெற்று துணை தலைவர்களாக வெற்றி பெற்றனர்.

#TamilSchoolmychoice

எதிர்த்து நின்ற அரவிந்த ராஜூக்கு 475 வாக்குகளும், மங்கை அரிராஜனுக்கு 332 வாக்குகளும் கிடைத்தன. பொருளாளர் பதவிக்கு விக்ரமன் அணி சார்பில் போட்டியிட்ட வி.சேகர் 665 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

அவரை எதிர்த்து நின்ற ஜெகதீஷ் 581 வாக்குகள் பெற்றார். இணை செயலாளர்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர்களுக்கான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன.