Home உலகம் என்னை சுட்டுக்கொல்ல சதித்திட்டம் தீட்டப்பட்டது: இம்ரான் கான்

என்னை சுட்டுக்கொல்ல சதித்திட்டம் தீட்டப்பட்டது: இம்ரான் கான்

463
0
SHARE
Ad

லாகூர், ஜூன் 12- பாகிஸ்தானில் சமீபத்தில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் முன்னாள் கிரிக்கெட் கேப்டன் இம்ரான் கானின் தெரீக் இ இன்சாப் கட்சி இரண்டாம் இடத்தை பிடித்தது. இந்நிலையில் லாகூரில் உள்ள அவரது வீட்டில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார்.

IMRANஅப்போது அவர் கூறியதாவது:-

நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தல் பஞ்சாப் பேரணிக்கூட்டத்தில் நான் கலந்துகொண்ட போது என்னை ஜி.டி. சாலையில் வைத்து சுட்டுக்கொல்ல சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளது. இதை மே-11 தேர்தலுக்கு முன்பே அரசு என்னிடம் தெரிவித்தது. இவ்வாறு அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

தேர்தல் பிரச்சாரத்தின் போது மேடையில் இருந்து கீழே விழுந்து முதுகெலும்பில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் இம்ரான் கான், இந்த சதித்திட்டத்திற்கு பின்னால் யார் இருக்கிறார்கள் என்று தெரிவிக்கவில்லை.