Home உலகம் இம்ரான் கானுக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை – சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டார்

இம்ரான் கானுக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை – சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டார்

286
0
SHARE
Ad
இம்ரான் கான்

இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு, தோஷாகானா வழக்கில் 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து இன்று சனிக்கிழமை அவர் கைது செய்யப்பட்டார். இஸ்லாமாபாத் நீதிமன்றமும் இம்ரான் கான் தீவிர அரசியலில் ஈடுபட 5 ஆண்டுகள் தடை விதித்தது.

இம்ரான் கான் ஆட்சியில் இருந்தபோது அரசாங்கத்திற்கு வழங்கப்பட்ட விலையுயர்ந்த பரிசுகளை விற்று லாபம் அடைந்ததாக குற்றம் சாட்டப்பட்டார். விசாரணையின் போது அவர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.

பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் (பி.டி.ஐ) என்னும் அரசியல் கட்சியின் தலைவருமான இம்ரான் கான், நீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகு – பஞ்சாப் காவல்துறையினருடன் ஒருங்கிணைந்து இஸ்லாமாபாத் காவல்துறையினரால் – லாகூரில் உள்ள அவரது இல்லத்தில் கைது செய்யப்பட்டார். லாகூரில் இருந்து இஸ்லாமாபாத்திலுள்ள சிறைச்சாலைக்கு அவர் அனுப்பப்பட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

70 வயதான அரசியல்வாதி இம்ரான் கான், முன்னாள் கிரிக்கெட் வீரராவார். அவருக்கு கூடுதலாக 1 இலட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. அபராதத்தைச் செலுத்தத் தவறினால் கூடுதலாக 6 மாத சிறைத் தண்டனையை அவர் அனுபவிக்க நேரிடும்.

உடனடியாக மேல்முறையீட்டை சமர்ப்பிக்கவிருப்பதாக இம்ரான் கானின் வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.