Home உலகம் பாகிஸ்தான் : மீண்டும் இம்ரான் கான் பிரதமராகலாம்!

பாகிஸ்தான் : மீண்டும் இம்ரான் கான் பிரதமராகலாம்!

566
0
SHARE
Ad

இஸ்லாமாபாத் : தற்போது சிறையில் இருக்கும் முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் மீண்டும் பிரதமராகலாம் என அவர் தலைமையேற்றியிருக்கும் பிடிஐ (PTI) கட்சியைச் சேர்ந்த முக்கியத் தலைவர் ஒருவர் தெரிவித்திருக்கிறார்.

இம்ரான் கான் மீண்டும் தேர்தலில் போட்டியிட முடியாது என 10 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

எனினும் அவரின் கட்சி 180-க்கும் மேற்பட்ட நாடாளுமன்றத் தொகுதிகளில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

#TamilSchoolmychoice

மீண்டும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று இம்ரான் கான் பிரதமராகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக இம்ரான் கான் கட்சியின் செனட்டரான பைசால் ஜாவேத் கூறியுள்ளார்.

இம்ரான் கான் இரண்டு தொகுதிகளில் போட்டியிட முடியாது என அவரின் வேட்பு மனுக்கள் கடந்த பிப்ரவரி 8 தேர்தலில் நிராகரிக்கப்பட்டன.

சில தொகுதிகளில் வாக்குப் பதிவுகளிலும், வாக்கு எண்ணிக்கையிலும் மோசடிகள் நிகழ்ந்ததாக பலர் பகிரங்கமாக அறிவித்ததைத் தொடர்ந்து பாகிஸ்தானில் அரசியல் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

இம்ரான் கான் கட்சியின் வெற்றி பாகிஸ்தான் இராணுவத்தின் கட்டுப்பாட்டிற்கு எதிரான நடவடிக்கையாகவும் பார்க்கப்படுகிறது.

தற்போது பாகிஸ்தானில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாத நிலைமை ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து கூட்டணி ஆட்சி அமைக்கும் முன்னெடுப்புகள் தீவிரமடைந்துள்ளன.

பாகிஸ்தான் இராணுவம் இம்ரான் கான் ஆதரவாளர்களை ஆட்சி அமைக்க விடாமல் தடுத்து, நவாஸ் ஷெரீப்பை பிரதமராக ஆக்க முயற்சி செய்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

பாகிஸ்தானில் கடந்த பிப்ரவரி 8-ஆம் தேதி பொதுத் தேர்தல் நடத்தப்பட்டது. வித்தியாசமான தேர்தல் நடைமுறை கொண்ட இஸ்லாமிய நாடான பாகிஸ்தானில் பெண்களுக்கும் ஆப்கானிஸ்தான் போல் அல்லாமல் அரசியல் முக்கியத்துவமும் அமைச்சுப் பொறுப்புகளும் வழங்கப்படுகின்றன.

336 உறுப்பினர்கள் கொண்ட பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் 266 தொகுதிகளுக்கு மட்டுமே தேர்தல் நடத்தப்படும். மீதமுள்ள 60 இடங்கள் பெண்களுக்கும் 10 இடங்கள் சிறுபான்மை சமூகத்திற்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஊழல் வழக்கினால் இலண்டனில் இருந்த நவாஸ் ஷெரீப்புக்கு பிணை வழங்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் சமீபத்தில் பாகிஸ்தான் திரும்பினார்.

இம்ரான் கான் ஆதரவாளர்களை ஆட்சி அமைக்க விடாமல் தடுக்க நவாஸ் ஷெரீப்பை பிரதமராக ஆக்க ராணுவம் முயற்சி செய்து வருவதாகக் கூறப்படுகிறது.