Home நாடு சரவாக் முன்னாள் ஆளுநர் துன் தாயிப் மாஹ்முட் காலமானார்

சரவாக் முன்னாள் ஆளுநர் துன் தாயிப் மாஹ்முட் காலமானார்

362
0
SHARE
Ad

கோலாலம்பூர் : சரவாக் மாநிலத்தின் முன்னாள் ஆளுநரும், முன்னாள் முதலமைச்சருமான துன் அப்துல் தாயிப் மாமூட் காலமானார்.

87 வயதான அவர் இன்று புதன்கிழமை (பிப்ரவரி 21) அதிகாலை 4.28 மணியளவில் உயிரிழந்ததாக அவரின் குடும்ப உறவினர்கள் சமூக ஊடகங்களில் பதிவிட்டனர்.

கோலாலம்பூரிலுள்ள தேசியப் பள்ளி வாசலில் அவரின் நல்லுடல் தற்போது வைக்கப்பட்டு பிரமுகர்கள் இறுதி மரியாதை செலுத்தி வருகின்றனர்.

#TamilSchoolmychoice

தாயிப் மாஹ்முட்டின் நல்லுடல் சரவாக் கொண்டு செல்லப்பட்டு அவரின் இறுதிச் சடங்குகள் அங்கு நடைபெறும்.

தாயிப் மாஹ்முட்டிற்கு பதிலாக சரவாக் மாநிலத்தின் புதிய ஆளுநராக அண்மையில் துன் வான் ஜூனாய்டி துவாங்கு ஜாபார் நியமிக்கப்பட்டார்.

உடல் நலம் குன்றி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தாயிப் நர் துன் அப்துல் தாயிப் மாஹ்முட், மருத்துவர்களின் ஆலோசனைகளுக்கு எதிராக மருத்துவமனையில் இருந்து வலுக்கட்டாயமாக அவரின் மனைவியால் அழைத்துச் செல்லப்பட்டார் என்ற சர்ச்சைகளும் எழுந்தன.

தாயிப் முகமட் 1 மார்ச் 2014 முதல் 26 ஜனவரி வரை சரவாக்கின் ஆளுநராகப் பதவி வகித்தார். அவருக்குப் பின்னர் வான் ஜூனாய்டி துவாங்கு ஜாபார் அந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டார்.

1981 முதல் 2014 வரை தாயிப் மாஹ்முட் சரவாக்கின் அதிகாரம் மிக்க முதலமைச்சராகப் பதவி வகித்தார். அந்த காலகட்டத்தில் சரவாக்கின் மிக நீண்ட கால முதலமைச்சராக அவர் வரலாறு படைத்தார்.

கொழும்பு உபகாரச் சம்பளம் பெற்று 1956 அடிலெய்ட் (ஆஸ்திரேலியா) பல்கலைக் கழகத்தில் தாயிப் மாஹ்முட் சட்டத்துறையில் பட்டம் பெற்றார்.

1959-இல் புவான்ஸ்ரீ லைலா தாயிப்பை மணந்த தாயிப் மாஹ்முட்டுக்கு 4 பிள்ளைகள் இருக்கின்றனர். 2009-இல் லைலா காலமானவுடன் தோபுவான் ரகாட் குர்டி தாயிப் என்ற வெளிநாட்டுப் பெண்மணியை 2010-இல் மணந்தார்.