
கூச்சிங் : சரவாக் மாநிலத்தின் புதிய ஆளுநராக அண்மையில் துன் வான் ஜூனாய்டி துவாங்கு ஜாபார் நியமிக்கப்பட்டார்.
அதைத் தொடர்ந்து உடல் நலம் குன்றி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் சரவாக் ஆளுநர் துன் அப்துல் தாயிப் மாஹ்முட், மருத்துவர்களின் ஆலோசனைகளுக்கு எதிராக மருத்துவமனையில் இருந்து வலுக்கட்டாயமாக அவரின் மனைவியால் அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார் என தகவல்கள் வெளியிடப்பட்டிருக்கின்றன. இதுகுறித்து காவல்துறை புகாரும் செய்யப்பட்டிருப்பதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அந்தப் புகாரை காவல் துறை
பிப்ரவரி 3-ஆம் தேதி நள்ளிரவில் தாயிப் மாஹ்முட்டை அவரின் மனைவி தோபுவான் ராகாட் குர்டி தாயிப் அழைத்துச் சென்றதாக புகார்கள் எழுந்திருக்கின்றன.
செய்யப்பட்டிருக்கும் காவல் துறை புகாரில், தாயிப் மாஹ்முட் ஒரு தள்ளுவண்டியில் அமர்த்தப்பட்டு, அவரின் மனைவி ரகாட்டின் உதவியாளர் ஒருவரால், மெய்க்காப்பாளர்களின் துணையோடு மருத்துவமனையின் முன்வாயில் வழியாக அழைத்துச் செல்லப்பட்டார் எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
87 வயதான தாயிப் முகமட் 1 மார்ச் 2014 முதல் 26 ஜனவரி வரை சரவாக்கின் ஆளுநராகப் பதவி வகித்தார். அவருக்குப் பின்னர் வான் ஜூனாய்டி துவாங்கு ஜாபார் அந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டார்.
1981 முதல் 2014 வரை தாயிப் மாஹ்முட் சரவாக்கின் அதிகாரம் மிக்க முதலமைச்சராகப் பதவி வகித்தார். அந்த காலகட்டத்தில் சரவாக்கின் மிக நீண்ட கால முதலமைச்சராக அவர் வரலாறு படைத்தார்.