Home கலை உலகம் அரசியல் பேசி விளம்பரம் தேடும் நிலைமையில் ரஜினி இல்லை – கேஎஸ் ரவிக்குமார்

அரசியல் பேசி விளம்பரம் தேடும் நிலைமையில் ரஜினி இல்லை – கேஎஸ் ரவிக்குமார்

641
0
SHARE
Ad

Ravikumarசென்னை, டிசம்பர் 4 – அரசியல் பேசி, பரபரப்பு ஏற்படுத்தி விளம்பரம் தேடும் நிலைமையில் ரஜினி இல்லை. என்றைக்கும் அப்படி இருந்ததும் இல்லை, என்று இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் கூறியுள்ளார்.

சமீபத்தில் கே.எஸ். ரவிக்குமார் அளித்த பேட்டியில் ரஜினியின் அரசியல் பேச்சு குறித்த கேள்விக்கு அவர் இவ்வாறு பதில் கூறியிருந்தார். அந்தப் பேட்டியின் ஒரு பகுதி.

கேள்வி: ” ‘பாட்ஷா’ வெற்றி விழா நிகழ்ச்சியில் ரஜினி பேசிய அரசியல் சூழ்நிலையில் ‘முத்து’ படம் இயக்கினீர்கள். அந்தப் படத்தில் அரசியல் வசனங்கள் இருந்தன. இப்போ ‘லிங்கா’ வெளியாகும் சமயம் திரும்பவும் ரஜினியைச் சுற்றி அரசியல் சர்ச்சை. இது திட்டமிட்ட ஒரு விளம்பரத்திற்கான பேச்சா?

#TamilSchoolmychoice

ரவிக்குமார் பதில்: ”நம் மக்கள் எதையும் தப்பான நோக்கத்தில்தான் பார்ப்பார்களா? ‘சிவாஜி’, ‘எந்திரன்’ படங்கள் வெளியான போதே ரஜினி பரபரப்பா ஏதாவது பேசினாரா? இல்லையே! அந்த ரெண்டு படங்களும் வசூலை வாரிக் குவித்ததே”.

“தன் பட வெளியாவதற்கு முன்னே அரசியல் பேசி, பரபரப்பு ஏற்படுத்தி, விளம்பரம் தேடும் நிலைமையில் ரஜினி என்றைக்கும் இருந்தது இல்லை. ‘என் படங்களுக்கு வேண்டுமானால் விளம்பரம் தேவைப்படலாம். ஆனால், ரஜினி படத்துக்கு விளம்பரம் தேவையே இல்லை’னு அமிதாப் பச்சனே சொல்லியிருக்கார். இதுக்கு மேல நான் என்ன சொல்ல?!”

கேள்வி: ” ‘லிங்கா’ இசை வெளியீட்டு விழா திடீர்னு அரசியல் மேடை ஆனது ஏன்?”

பதில்: ”முதல்ல ‘லிங்கா’ படத்தைப் பத்தி மட்டும்தான் எல்லாரும் பேசினாங்க. அமீர் பேச்சுதான் அரசியல் பக்கம் எல்லாரையும் திருப்பிருச்சு. ஆனா, ரஜினி அப்பவும் அரசியல் பத்தி எதுவுமே பேசலையே. அரசியல் எனக்கும் தெரியும்’னு மட்டும்தான் சொன்னார். அரசியலில் இறங்கப்போறேன்’னு எந்த உத்தரவாதமும் கொடுக்கவில்லை!”

கேள்வி: ”அரசியல் ஆர்வம் இல்லைன்னா, இமயமலைக்குப் போவாரா?”

பதில்: ”இல்லை. இனிமேல் ரஜினி இமயமலைக்குப் போக மாட்டார். அப்படியே ஏதோ ஒரு மாற்றம் விரும்பி போனாலும், ஒரு சுற்றுலாப் பயணியாகத்தான் போவாரே தவிர, சாமியார் மனநிலையில் போக மாட்டார் என கேஎஸ் ரவிக்குமார் கூறினார்.