Home கலை உலகம் ரஜினிக்கு இயக்குநர் கே.எஸ் .ரவிக்குமார் எச்சரிக்கை!

ரஜினிக்கு இயக்குநர் கே.எஸ் .ரவிக்குமார் எச்சரிக்கை!

796
0
SHARE
Ad

ksravikumar-rajinikanthசென்னை, ஜூன் 25 – லிங்கா படத்தின் படப்பிடிப்பு தொடர்பாக ரஜினிக்கு இயக்குநர் கே.எஸ் .ரவிக்குமார் எச்சரிக்கை செய்துள்ளார். கடந்த 2 வருடத்துக்கு முன்பு ரஜினிகாந்த் “ராணா” பட படப்பிடிப்பில் பங்கேற்றபோது உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அப்போது அவரது சிறுநீரகம் பாதிக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் சிங்கப்பூர் சென்று சிகிச்சை பெற்றார். இந்நிலையில் “ராணா” படம் கைவிடப்பட்டது. இதையடுத்து மகள் சவுந்தர்யா இயக்கிய கோச்சடையான் படத்தில் நடித்தார் ரஜினி.

இப்படம் 3 டி அனிமேஷன் கேப்சர் முறையில் படமாக்கப்பட்டது.  இதில் ரஜினியின் முக அசைவுகள் மட்டும் படமாக்கப்பட்டது. கடினமான சண்டை காட்சிகளில் ரஜினிக்கு பதிலாக ஜீவா என்ற ஸ்டன்ட் நடிகர் டூப் போட்டு நடித்தார்.

#TamilSchoolmychoice

superstar Rajinikanthஇது ரசிகர்களுக்கு திருப்தி அளிக்கவில்லை. ரசிகர்களின் ஏக்கத்தை போக்கும் வகையில் தற்போது “லிங்கா” என்ற படத்தில் ரஜினி நடித்து வருகிறார். கே.எஸ் .ரவிக்குமார் இப்படத்தை இயக்குகிறார். இதில் வசனத்துக்கு முக்கியத்துவம் தரப்பட்டிருக்கிறது.

சண்டைக் காட்சிகளில் ரஜினி நடித்தாலும் உடலை வருத்திக்கொண்டு நடிக்கும் கடினமான காட்சிகளில் நடிக்கக்கூடாது என்று அவருக்கு மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதை மனதில் வைத்தே ரவிக்குமாரும் தனது கதையை தயாரித்திருக்கிறாராம். சண்டைக் காட்சிகளின்போது ரஜினியை மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு இயக்குநர் ரவிக்குமார் கேட்டுக்கொண்டுள்ளர்.