புத்ரா ஜெயா, ஜூன் 25 – கடந்த ஒருவார காலமாக கூறப்பட்டு வந்த பல்வேறு ஆரூடங்களுக்கு மத்தியில், இன்று பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக், அமைச்சரவையில் 6 புதிய நியமனங்களை செய்துள்ளதாக அறிவித்தார்.
அதன்படி, மசீச தலைவர் டத்தோஸ்ரீ லியாவ் தியாங் லாய் போக்குவரத்து அமைச்சராக நியமிக்கப்பட்டதோடு, பிரதமர் துறையின் அமைச்சர்களாக மசீச துணைத்தலைவர் டத்தோ டாக்டர் வீ கா சியாங் மற்றும் கெராக்கான் தலைவர் டத்தோ மா சியூ கியாங் ஆகிய இருவரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், மசீச உதவித்தலைவர் டத்தோ லீ சீ லியாங், அனைத்துலக வர்த்தக மற்றும் தொழில்துறை துணை அமைச்சராகவும் மற்றும் டத்தோ சுவா தி யோங் துணை நிதியமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
செனட்டர் சியூ மெய் ஃபன் மகளிர், குடும்பம் மற்றும் சமுதாய வளர்ச்சித்துறையின் துணை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.