Home உலகம் இந்தியாவிற்கான அமெரிக்க தூதராக ரிச்சர்ட் ராகுல் வர்மா பொறுப்பேற்கிறார்! 

இந்தியாவிற்கான அமெரிக்க தூதராக ரிச்சர்ட் ராகுல் வர்மா பொறுப்பேற்கிறார்! 

486
0
SHARE
Ad

Verma-Richவாஷிங்டன், டிசம்பர் 4 – இந்தியாவிற்கான அமெரிக்க தூதராக, இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிச்சர்ட் ராகுல் வர்மா பொறுப்பேற்க உள்ளார். இதற்கு அமெரிக்க செனட் சபையும் ஒப்புதல் அளித்துள்ளது.

அமெரிக்காவின் மிகவும் சக்தி வாய்ந்த செனட் அமைப்பின், வெளியுறவுத் துறை கூட்டத்தில், ராகுல் வர்மாவை தேர்வு செய்ய பெரும்பான்மையான மையங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன.

குறிப்பாக ராகுல் வர்மா தேர்வு செய்யப்படுவதற்கு அந்நாட்டின் இரு துருவங்களான குடியரசு கட்சி மற்றும் ஜனநாயக கட்சி ஒரு மித்த கருத்துடன் ஆதரவு தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

#TamilSchoolmychoice

இது குறித்து செனட் அமைப்பின் தலைவரான ஹாரி ரீட் கூறியதாவது:- “இந்தியாவிற்கான அமெரிக்க தூதராக செயல்பட ராகுல் வர்மா மிகவும் பொருத்தமான நபராக இருப்பார். தென்கிழக்கு ஆசிய நாடுகளின் வெளியுறவுக் கொள்கைகளில் அவருக்கு மிகுந்த அறிவு உள்ளது”.

“முன்னாள் வெளியுறவுத்துறை செயலாளராக பதவி வகித்த ஹிலாரி கிளிண்டனுடன் அவர் பணியாற்றியுள்ளார். அது அவருக்கு மிகுந்த அனுபவத்தைக் கொடுத்திருக்கும்” என்று அவர் கூறியுள்ளார்.

குடியரசுக் கட்சியினர் ராகுல் வர்மாவின் தேர்வு குறித்துக் கூறுகையில், “புதிய அரசுடன் அவர் மிகவும் நெருக்கமாக இணைந்து செயல்படுவார் என நம்புகிறோம்.”

“இந்தியா-அமெரிக்கா நாடுகளுக்கிடையே எதிர்கால உறவு சிறப்பாக அமையும் வகையில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பொறுப்பை வர்மா ஏற்க உள்ளார். இது சவால் நிறைந்த பணி.”

“எனினும், இந்தியாவில் மேற்கொள்ளப்பட்டு வரும் சீர்திருத்தங்களுக்கு காரணமான இந்தியப் பிரதமர் மோடி மீது மிகுந்த நம்பிக்கை உள்ளது” என்று அவர் கூறியுளார்.