Home நாடு அன்வாரின் ‘டத்தோஸ்ரீ’ பட்டம் பறிப்பு – சிலாங்கூர் சுல்தான் அதிரடி நடவடிக்கை

அன்வாரின் ‘டத்தோஸ்ரீ’ பட்டம் பறிப்பு – சிலாங்கூர் சுல்தான் அதிரடி நடவடிக்கை

489
0
SHARE
Ad
sultan selangor
சிலாங்கூர் சுல்தான்

பெட்டாலிங் ஜெயா, டிசம்பர் 4 – கடந்த 1992-ம் ஆண்டு சிலாங்கூர் சுல்தானால் எதிர்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிமுக்கு வழங்கப்பட்ட “டத்தோஸ்ரீ” பட்டம் திரும்பப் பெறப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த நவம்பர் 3-ம் தேதி முதல் அன்வாரின் டத்தோஸ்ரீ பட்டம் பறிக்கப்பட்டதாக சிலாங்கூர் சுல்தான் சலாஹுதின் அப்துல் அஜிஸ் ஷா அறிவித்துள்ளார்.

சிலாங்கூர் அரண்மனை இது குறித்து இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், சிலாங்கூர் மந்திரி பெசார் விவகாரத்தில், அன்வார் தொடர்ந்து சிலாங்கூர் சுல்தானின் நேர்மையை விமர்சித்து கேள்வி எழுப்பி வந்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

“சிலாங்கூர் அரசவை குழுவிடம்  இது குறித்து சுல்தான் கலந்தாலோசித்து, இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளார். இந்த பட்டம் பறிப்பு கடந்த நவம்பர் 3-ம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்டது” என சுல்தானின் தனிப்பட்ட செயலாளர் டத்தோ முகமட் முனீர் பானி தெரிவித்துள்ளார்.

மேலும் பிகேஆர் கட்சியின் ஆலோசகரான அன்வாரின் நடவடிக்கைகளும், செயல்பாடுகளும் அந்த பட்டத்தை நீண்ட நாட்கள் தக்க வைத்துக் கொள்ள தகுதியற்றவையாக உள்ளதாக முகமட் முனீட் குறிப்பிட்டுள்ளார்.