சென்னை, டிசம்பர் 4 – வருமான வரி வழக்கில் தண்டனையிலிருந்து தப்பிக்கவே அபராதத் தொகையை செலுத்த ஜெயலலிதா முன்வந்திருப்பதாக திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்; “17 ஆண்டுகள் நடைபெற்று வந்த வருமானவரி வழக்கிற்காக நீதிமன்றங்களும், நீதிபதிகளும் செலவிட்ட நேரத்திற்கு யார் பொறுப்பாளி என கேள்வி எழுப்பியுள்ளார்”.
“காசு உள்ளவர்கள் அபராதத்தை செலுத்திவிட்டால் அவர்கள் செய்த குற்றம் எல்லாம் மறக்கப்பட்டுவிடுமா என்றும் அவர் வினவியுள்ளார்”.
“அபராதத்தை செலுத்துகிறார்கள் என்றால் குற்றத்தை அவர்களே ஒப்புக்கொண்டு விட்டனர் என்றுதானே பொருள் என கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்”.
“17 ஆண்டுகள் வழக்கை நடத்தி தீர்ப்பு வெளியிடப்பட உள்ள நேரத்தில் தப்பிக்க வழியில்லாமல் அபராதத் தொகையை கட்டி விடுவதாகக் கூறினால் அதனை வருமான வரித்துறை ஏற்றுக் கொள்ளுமா? என கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்”.