Home Featured உலகம் இந்தியாவின் எதிர்ப்பை மீறி பாகிஸ்தானுக்கு போர் விமானங்கள் வழங்க அமெரிக்கா உறுதி!

இந்தியாவின் எதிர்ப்பை மீறி பாகிஸ்தானுக்கு போர் விமானங்கள் வழங்க அமெரிக்கா உறுதி!

785
0
SHARE
Ad

usaவாஷிங்டன் – இந்தியாவின் எதிர்ப்பையும் மீறி பாகிஸ்தானுக்கு போர் விமானங்கள் வழங்க அமெரிக்கா முடிவெடுத்துள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பை அமெரிக்கா வெளியிட்டது.

பாகிஸ்தானுக்கு எட்டு F-16 ரக போர் விமானங்கள் வழங்க அமெரிக்கா அன்மையில் முடிவெடுத்தது. இதனை இந்தியா கடுமையாக எதிர்த்தது. இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் ரிச்சார்டு வர்மாவையும் நேரில் அழைத்து இந்தியாவின் எதிர்ப்பை தெரிவித்தார் வெளியுறவுத்துறை செயலாளர் எஸ்.ஜெயசங்கர்.

ஆனால் தற்போது அமெரிக்கா இந்தியாவின் எதிர்ப்பு எதையும் கண்டுகொள்ளாமல் பாகிஸ்தானுக்கு போர் விமானங்கள் விற்பனை செய்வதை உறுதி செய்துள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிக்கை அமெரிக்காவின் கூட்டாட்சி பதிவேட்டில் வெளிடப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

அமெரிக்க வெளியுறவு கொள்கை நோக்கங்களை நிறைவேற்றும் வகையில் தெற்கு ஆசிய பகுதியில் போர்த்திறம் சார்ந்த கூட்டாளியின் வேண்டுகோளை ஏற்று அவர்களது தேசிய பாதுகாப்பை மேம்படுத்த இந்த போர் விமானங்கள் விற்பனை செய்யப்படுவதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.