Home வாழ் நலம் நுங்கு அதற்கு ஏங்கு

நுங்கு அதற்கு ஏங்கு

1558
0
SHARE
Ad

கோலாலம்பூர், ஜூன் 12- வெயிலின் உஷ்ணத்தை தணிக்க பலவித பானங்களை அருந்துகிறோம்.

noonguதர்ப்பூசணி, ஆரஞ்சு போன்ற விதவிதமான பழவகைகளை சாப்பிடுகிறோம். ஆனால் அவைகளை எல்லாம்விட சிறந்தது, நுங்கு. உடலுக்கு குளிர்ச்சியை தருவதில் இது முதலிடத்தை வகிக்கிறது.

தென்னை மரத்தின் ஒவ்வொரு பகுதியும் உதவுவது போல், நுங்கை வழங்கும் பனைமரத்தின் ஒவ்வொரு பகுதியும் நமக்கு உதவி செய்கிறது. பனைமரத்தின் முற்றாத பனங்காயே நுங்கு. இதை சரியான பருவத்தில் வெட்டவேண்டும்.

#TamilSchoolmychoice

அப்போதுதான் நுங்கில் காணப்படும் வழுவழுப்பான, திரவ நிலை கலந்த திண்ம பொருள் மிகவும் இனிப்பாகவும், உண்பதற்கு சுவையாகவும் இருக்கும். பெண் பனையின் பாளையில் இருந்து இளம் பனங்காய்கள் உண்டாகும். இவை கொத்தாக குலைகளில் தோன்றும்.

noongu 3இந்த காய்களில் மூன்று கண்கள் என்று அழைக்கப்படும் குழிகள் காணப்படும். ஒரு சில காய்கள் இரண்டு கண்களை கொண்டிருக்கும். பனங்காய்களை வெட்டி நுங்கை தனியாக எடுக்கலாம் அல்லது உறிஞ்சி குடிக்கலாம்.

நுங்கில் 10-11 சதவீதம் சர்க்கரை சத்தும், 2 சதவீதம் புரதச்சத்தும் உள்ளது. கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் பி காம்ப்ளக்சில் உள்ள தையாமின், ரிபோப்ளோவின் போன்ற சத்துக்களும் நுங்கில் அடங்கியுள்ளன. நுங்கின் நீர், வியர்வை குருவை (வேர்க்குரு) நீக்கும். பசியைத்தூண்டும். நுங்கு சாப்பிட்டால் சிறுநீர் நன்கு பிரியும். உடலுக்கும் பலத்தை கொடுக்கும்.

நுங்கின் மேல் தோல் துவர்ப்பாக இருக்கும். அதனை நீக்கி விட்டு பலர் சாப்பிடுகிறார்கள். நுங்கை அந்த மேல் தோலுடன் சாப்பிட்டால் வயிற்றுப்புண்ணை குணமாக்கும்.

அம்மை நோயால் அவதிப்படுபவர்கள் இளம் நுங்கை சாப்பிட்டு வர உடல் குளிர்ச்சி ஏற்படும். குடலில் உள்ள சிறு புண்களும் ஆறும்.

நுங்கை பால் மற்றும் தேனுடன் சேர்த்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும். சர்பத்தில் கலந்தும் சாப்பிடுவார்கள். இது உடலுக்கு குளிர்ச்சியை கொடுக்கும் சுவையான பானமாகும்.

தாய்லாந்தில் பனை மரங்கள் அதிகம். அங்கு உள்ளவர்கள் நுங்கை எடுத்து பாட்டில்களில் பதப்படுத்தி உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்கின்றனர். மருத்துவ குணங்கள் நிறைந்த நுங்குவை கோடை காலத்தில் சாப்பிட்டால் அதன் முழுபலனையும் அனுபவிக்கலாம்.