ஜூன் 24 – சீத்தாப்பழத்தின் தோல், விதை, இலை அனைத்துமே அரிய மருத்துவப் பண்புகளைக் கொண்டது. சீத்தாப்பழத்தில் நீர்ச்சத்து அதிகமாக உள்ளது. மேலும் மாவுசத்து, புரதம், கொழுப்பு, தாது உப்புக்கள், நார்ச் சத்து, இரும்புச் சத்து போன்றவை அடங்கியுள்ளன.
இத்தகைய சத்துக்கள் சீத்தாப்பழத்தில் அடங்கியிருப்பதனால் தான் இப்பழம் மிகுந்த மருத்துவ பயன்களை அடக்கியுள்ளது. சீத்தாப்பழத்தைச் சாப்பிடுவதால் செரிமானம் அதிகமாகும்; மலச்சிக்கல் நீங்கும்.
சீத்தாப்பழச்சதையோடு உப்பைக் கலந்து உடையாத முகப்பருக்கள் மேல் பூசிவர, பருக்கள் பழுத்து உடையும். இலைகளை அரைத்துப் புண்கள் மேல் போட்டுவர புண்கள் ஆறும். விதைகளைப் பொடியாக்கிச் சம அளவுப் பொடியுடன் சிறுபயிறு மாவு கலந்து தலையில் தேய்த்துக் குளித்து வர முடி மிருதுவாகும்.
சீத்தாப்பழம் குளிர் மற்றும் காய்ச்சலைக் குணப்படுத்தும். சீத்தாப்பழ விதை பொடியோடு கடலை மாவு கலந்து எலுமிச்சைச் சாறில் குழைத்துத் தலையில் தேய்த்து ஊறிய பின்னர் குளித்து வர முடி உதிராது.
சிறுவர்களுக்குச் சீத்தாப்பழம் கொடுத்துவர எலும்பு உறுதியாகும். பல்லும் உறுதியாகும். சிறிதளவு வெந்தயம், சிறுபயிறு, இரண்டையும் இரவு ஊறவைத்துக் காலையில் சாப்பிட்டால் சர்க்கரை நோய் குணமாகும்.
10 சீத்தாப்பழத்தைத் தொடர்ந்து உண்டு வந்தால் இதயம் பலப்படும். காசநோய், மஞ்சள் காமாலை, தொற்று நோய், காய்ச்சல், தலைவலி, கை-கால் வலி, போன்ற பல வியாதிகளைக் குணமாக்கும் சீத்தாப்பழம்.