Home வாழ் நலம் மாலைக்கண் நோயை தடுத்து, ஆஸ்துமாவை குணப்படுத்தும் பலாப்பழம்!

மாலைக்கண் நோயை தடுத்து, ஆஸ்துமாவை குணப்படுத்தும் பலாப்பழம்!

1402
0
SHARE
Ad

palaa ps;smஜூன் 2 – முக்கனிகளுள் ஒன்றான பலாப்பழம் பல மருத்துவகுணங்கள் கொண்டவை. பலாப்பழத்தை தினமும் சப்பிட்டு வந்தால், கண் பார்வையை சரிசெய்து, புற்று நோய், இரத்த அழுத்தம், சர்க்கரை நோய் ஆகியவை வராமல் பாதுகாக்கும்.

பலாப்பழம் தினமும் சப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்:

புரதச்சத்து நிறைந்தது:

#TamilSchoolmychoice

பலாப்பழத்தில் புரதச்சத்து அதிகம் இருப்பதால், இதனை தினமும் உட்கொண்டு வாருங்கள். மேலும் இது பருப்பு வகைகளுக்கு சிறந்த மாற்றாக விளங்கும். இதனால் பருப்புக்களின் மூலம் ஏற்படும் வாய்வுத் தொல்லையைத் தவிர்க்கலாம்.

நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்:

பலாப்பழத்தில் வைட்டமின் சி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகம் இருப்பதால், இவற்றை உட்கொள்வதன் மூலம் உடலின் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இதனால் காய்ச்சல், சளி போன்றவை தாக்காமல் தடுக்கலாம்.

-jackfruit,மலச்சிக்கலை போக்கும்:

பலாப்பழத்தை சாப்பிட்டு வந்தால், மலச்சிக்கல் பிரச்சனை நீங்கும். மேலும் இதில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால், செரிமான மண்டலம் சீராக செயல்பட்டு, நச்சுக்கள் அனைத்தும் வெளியேறி, முகம் பொலிவோடு இருக்கும். மேலும் இதில் உடலின் ஆற்றலை அதிகரிக்கும்.

புற்றுநோயைத் தடுக்கும்:

பலாப்பழத்தில் ஆன்டி-ஆக்ஸிடன்ட், பைட்டோ நியூட்ரியன்டுகள் மற்றும் ப்ளேவோனாய்டு ஆகிய அமில சத்துக்கள் உள்ளன. இவை புற்றுநோயின் தாக்கத்தில் இருந்து பாதுகாப்பு அளிக்கும். புற்றுநோய் வராமல் தடுக்கும்.

இரத்த அழுத்தத்தை குறைக்கும்:

பலாப்பழத்தில் பொட்டாசிய சத்து அதிகம் இருப்பதால், இது உடலில் சோடியத்தின் அளவை சீராக பராமரிக்கும். இதனால் உடலில் உயர் இரத்த அழுத்தம், பக்கவாதம் மற்றும் மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு குறையும்.

jackfruitகண் பார்வையை மேம்படுத்தும்:

பலாப்பழத்தில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகம் இருப்பதால், அவை பார்வை கோளாறு ஏற்படுவதைத் தடுப்பதோடு, கண்களில் புரை ஏற்படுவதையும் தடுக்கும். முக்கியமாக பலாப்பழத்தில் கண்களின் ஆரோக்கியத்திற்கு தேவையான வைட்டமின் ‘ஏ’ சத்து அதிகம் உள்ளது.

ஆஸ்துமாவை குணமாக்கும்:

ஆஸ்துமாவினால் பாதிக்கப்பட்டவர்கள், பலாப்பழத்தை சாப்பிட்டு வந்தால், ஆஸ்துமா பிரச்சனையில் இருந்து விரைவில் நிவாரணம் பெறலாம். மேலும், இந்த பழத்தை உட்கொண்டு வந்தால், மாலைக்கண் நோய் ஏற்படுவதைத் தடுக்கலாம்.