Home அரசியல் மலாக்கா இரவு சந்தையை மூடக்கூடாது – முகமட் நஸ்ரி கோரிக்கை

மலாக்கா இரவு சந்தையை மூடக்கூடாது – முகமட் நஸ்ரி கோரிக்கை

565
0
SHARE
Ad

NazriAbdulAzizமலாக்கா, ஜூன் 25 – மலாக்காவில் உள்ள  ‘ஜோங்கர் வாக்’ என்ற இரவு சந்தையை மூட வேண்டாம் என்று சுற்றுல்லாத்துறை அமைச்சர் முகமட் நஸ்ரி அப்துல் அஜீஸ் (படம்), மலாக்கா முதலமைச்சர் இட்ரிஸ் ஹாரோனை கேட்டுக்கொண்டுள்ளார்.

இன்று நாடாளுமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களைச் சந்தித்த நஸ்ரி, “இன்று முதலமைச்சரிடம் இது குறித்து பேசினேன். அங்கு போக்குவரத்து மற்றும் வாகனம் நிறுத்தும் பிரச்சனைகளைத் தீர்க்கும் பொருட்டு சோதனைக்காக இரவு சந்தை 4 வாரங்கள் மூடப்படுவதாகக் கூறினார்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், இரவு சந்தை 4 வாரங்கள் மூடப்படுவதது குறித்து முதலமைச்சர் மீண்டும் ஒரு முறை யோசிக்க வேண்டும் என்றும் நஸ்ரி கூறினார்.

#TamilSchoolmychoice

மலாக்கா இரவு சந்தை மூடப்பட்டதற்குக் காரணம் பொதுத்தேர்தலில் மசீச தோல்வியுற்றது தான் என்று இட்ரிஸ் வெளிப்படையாகவே தனது அறிக்கையில் கூறிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.