பிகேஆர் வியூக இயக்குனர் ரபிஸி ரம்லி இன்று வெளியிட்ட அறிக்கையில், போதைப் பொருள் கும்பலுடன் தொடர்பு வைத்துள்ள காவல்துறை அதிகாரிகளின் பெயர் பட்டியல் அடங்கிய ரகசிய குறிப்பை வெளியிடவிருப்பதாக சஞ்சீவி தன்னிடம் கூறினார் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், சஞ்சீவன் சுடப்பட்டதற்கு முதல் நாள், தன்னிடம் 20 நிமிடங்கள் பேசியதாகவும், அக்குற்றங்களில் தொடர்புள்ள காவல்துறை அதிகாரிகளுக்கு மிக கடுமையான தண்டனை கிடைக்கும் என்றும் தெரிவித்ததாக ரபிஸி இன்று பிகேஆர் தலைமையகத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.
இருப்பினும், சம்பந்தப்பட்டுள்ள காவல்துறை அதிகாரிகளில் பெயரை சஞ்சீவி தன்னிடம் கூறவில்லை என்றும் ரபிஸி தெரிவித்தார்.
இந்த ரகசிய குறிப்பை வெளியிடுவது தொடர்பாக சஞ்சீவன் சுடப்பட்டிருக்கலாம் என்று தான் சந்தேகிப்பதாகவும் ரபிஸி கூறினார்.