Home Featured கலையுலகம் சினிமா நட்சத்திரங்களுடன் நம்ம சஞ்சீவன் – என்ன கதை?

சினிமா நட்சத்திரங்களுடன் நம்ம சஞ்சீவன் – என்ன கதை?

798
0
SHARE
Ad

கோலாலம்பூர் – மைவாட்ச் அமைப்பின் தலைவர் டத்தோ ஆர்.ஸ்ரீ சஞ்சீவன்.. மலேசியாவின் நிஜக் கதாநாயகன்..

பல திரைப்படங்களில் குற்றங்களைத் தடுக்கப் போராடும் கதாநாயகன் துப்பாக்கிக் குண்டுகளை மார்பில் தாங்கி, சாவிலிருந்து மீண்டு வருவார். அப்படிப்பட்டவர்கள் வெறும் சினிமாவில் மட்டுமல்ல நிஜ வாழ்விலும் உள்ளனர் என்பதற்கு உதாரணமானவர்களில் சஞ்சீவனும் ஒருவர்.

Sanjeevan

#TamilSchoolmychoice

கடந்த 2013-ம் ஆண்டு இதே செப்டம்பர் மாதம் வாக்கில், உடம்பில் சில தோட்டாக்கள் துளைத்திருக்க உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த அவர் மலேசியர்களின் பிரார்த்தனைகளாலும், தீவிர சிகிச்சையாலும் எமனுடன் கைகுலுக்கிவிட்டு சாவிலிருந்து மீண்டு வந்தார்.

இந்த இரண்டு ஆண்டுகளில் தனது துன்பங்களிலிருந்து எல்லாம் மீண்டு வந்து இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிவிட்ட சஞ்சீவனுக்கு அண்மையில் தான் திருமணம் நடந்தது.

இந்நிலையில், குற்றச் சம்பவங்கள் பற்றிய செய்திகள் அடிக்கடி இடம்பெறும் சஞ்சீவனின் பேஸ்புக் பக்கத்தில், நேற்று பிரபல சினிமா நட்சத்திரங்கள் காட்சியளித்தனர். அவரைப் பின் தொடர்பவர்களுக்கு அது மிகப் பெரும் ஆச்சர்யத்தை அளித்தது.

Sanjeevan 1

நடிகர் அரவிந்த்சாமி, நடிகர் சரத்குமார் மற்றும் கவிப்பேரரசு வைரமுத்து ஆகியோருடன் கைகுலுக்கிக் கொண்டு நிற்கிறார் சஞ்சீவன்.

“என்ன செய்யப் போகிறார் இந்த புதுமாப்பிள்ளை? படத்தில் கதாநாயகனாக எதுவும் நடிக்கப் போகிறாரா? அல்லது இவரின் சொந்தக் கதையையே படமாக எடுக்கப் போகிறார்களா? என்ற ஆர்வ மிகுதியில் அவருடன் பேசியதில் சில தகவல்களைப் பெற முடிந்தது.

அந்தத் தகவல் என்னவென்றால், அது ஒரு நட்பு ரீதியான மற்றும் ‘மலேசியா – சென்னை’ இடையிலான வர்த்தக ரீதியான சந்திப்பு..

Sanjeevan 2

விரைவில் சென்னையில் வர்த்தகம் ஒன்றைத்  தொடங்கவுள்ள சஞ்சீவன், அரவிந்த்சாமியிடம் சுமார் 3 மணி நேரங்கள் கலந்துரையாடி, ஆலோசனைகளைப் பெற்றுள்ளார்.

டத்தோ சஞ்சீவன் வணிக நிர்வாகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. சஞ்சீவனின் புதிய முயற்சிகளுக்கு செல்லியலின் வாழ்த்துகள்..

– ஃபீனிக்ஸ்தாசன்