Home Featured நாடு “ஒபாமாவுடன் கோல்ப் விளையாடிய ஒரே பிரதமர் நான்” – நஜிப் பெருமிதம்

“ஒபாமாவுடன் கோல்ப் விளையாடிய ஒரே பிரதமர் நான்” – நஜிப் பெருமிதம்

630
0
SHARE
Ad

Najibகோலாலம்பூர் – “ஒபாமாவுடன் கோல்ப் விளையாடிய ஒரே பிரதமர் நான் என்ற சாதனையைப் புரிந்துள்ளேன்” என்று நேற்று நியூயார்க்கில், மலேசிய மாணவர்களுடன் முன் நகைச்சுவையாகக் கூறியுள்ளார் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்.

மலேசியாகினி இணையதளம் வெளியிட்டுள்ள நஜிப்பின் உரை:-

“அமெரிக்க அதிபருடன் தனிப்பட்ட முறையில் நல்ல நட்புறவைக் கொண்டிருக்கும் நோக்கில் தான் இதை செய்தேன். மலேசியாவிற்காக இதை செய்தேன். என் மக்களுக்காக இதை செய்தேன்”

#TamilSchoolmychoice

“எதிர்பாராதவிதமாக நேரம் சரியாக அமையாததால், என்னால் அரசியல் லாபம் எதையும் பெற முடியவில்லை” என்று நகைச்சுவையாகக் கூறியுள்ளார் நஜிப்.

ஒபாமா மலேசியாவிற்கு வருகை புரிந்திருந்த சமயம், மலேசியாவின் கிழக்குக் கடற்கரைப் பகுதிகள் வெள்ளத்தால் நிறைந்திருந்தது அப்போதும் ஒபாமாவுடன் தான் கோல்ப் விளையாடிய சம்பவத்தை நஜிப் நகைச்சுவையாகப் பகிர்ந்துள்ளார்.