ஆகஸ்ட் 21 – நாட்டின் புகழ் பெற்ற சுற்றுலாத் தலமான கெந்திங் மலையிலிருந்து 49 பேரை ஏற்றிக் கொண்டு கீழே இறங்கிக் கொண்டிருந்த பேருந்து இன்று மத்தியானம் விபத்துக்குள்ளாகி, பள்ளத்தாக்கில் விழுந்ததைத் தொடர்ந்து சுமார் 33 பேர் மரணமடைந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகின்றது.
நாட்டில் நிகழ்ந்த மிக மோசமான பேருந்து விபத்துக்களில் ஒன்றாக இது கருதப்படுகின்றது. காயமடைந்த 15 பேர் செலாயாங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 10 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், மரண எண்ணிக்கை 33 வரை இருக்கக் கூடும் என்றும் முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
(மேலும் விவரங்கள் தொடரும்)