கோலாலம்பூர், ஆகஸ்ட் 24 – கெந்திங் மலை பேருந்து விபத்தில் பலியானவர்களிள் 28 பேரின் சடலங்கள் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன என்று கோலாலம்பூர் மருத்துவமனை பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இன்னும் 9 பேரின் உடல்கள் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கவில்லை என்றும், அதில் 2 பேரின் உடல் அடையாளம் காணப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
கோலாலம்பூர் மருத்துவமனை நேற்று விபத்தில் இறந்த 35 பேரின் பெயர் பட்டியலை வெளியிட்டது.
கடந்த புதன்கிழமை மாலை, கெந்திங்-கோலாலம்பூர் சாலையில் 36வது மைலில், சின் ஸ்வீ குகைக் கோவிலில் இருந்து 2 கிலோ மீட்டர் தூரத்தில் இந்த விபத்து நிகழ்ந்தது.
இதில் பேருந்து ஓட்டுநர் உட்பட 37 பேர் பரிதாபமாக இறந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.