Home நாடு அமைச்சர்கள் சொந்த செலவில் கார்களுக்கு எண்ணெய் நிரப்பிக் கொள்ள வேண்டுமா? முட்டாள்தனமான யோசனை – நஸ்ரி

அமைச்சர்கள் சொந்த செலவில் கார்களுக்கு எண்ணெய் நிரப்பிக் கொள்ள வேண்டுமா? முட்டாள்தனமான யோசனை – நஸ்ரி

481
0
SHARE
Ad

nazriகோலாலம்பூர், செப்டம்பர் 4 – அமைச்சர்கள் அனைவரும் தங்களது சொந்த பணத்தில் கார்களுக்கு எண்ணெய் நிரப்பிக்கொள்ள வேண்டும் என்று எதிர்கட்சிகள் கூறுவது முட்டாள் தனமான கருத்து என்று சுற்றுலாத்துறை அமைச்சர் முகமட் நஸ்ரி அப்துல் அஜீஸ் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில், “இந்த யோசனையைக் கூறிய பிகேஆர் வியூக இயக்குநர் ரபிஸி ரம்லி ஒரு முட்டாள் குழந்தை. இதற்கு முன் நான் செய்யாத ஒரு ஊழல் குற்றச்சாட்டை என் மீது சுமத்தினார். அவர் முதலில் அவருடைய மாநில மந்திரி பெசார், செயற்குழு உறுப்பினர்கள், பினாங்கு முதலமைச்சர் மற்றும் கிளந்தான் மந்திரி பெசார் ஆகியோரை தங்களது சொந்த பணத்தில் கார்களுக்கு எண்ணெய் நிரப்ப ஆலோசனை கூறவேண்டும்” என்று சாடியுள்ளார்.

இன்று காலை நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் பேசிய ரபிஸி ரம்லி, நாட்டில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டதால் மக்கள் அடையும் துன்பத்தை அமைச்சர்களும் தெரிந்துகொள்ள வேண்டும். ஆகவே அமைச்சர்கள் அனைவரும் தங்களது சொந்த பணத்தில் கார்களுக்கு எண்ணெய் நிரப்ப பிரதமர் நஜிப் துன் ரசாக் உத்தரவிடவேண்டும் என்று தெரிவித்தார்.

#TamilSchoolmychoice