Home 13வது பொதுத் தேர்தல் எதிர்கட்சிகள் கூறும் குற்றச்சாட்டுகளுக்காக நேரத்தை வீணடிக்க முடியாது – தேர்தல் ஆணையம்

எதிர்கட்சிகள் கூறும் குற்றச்சாட்டுகளுக்காக நேரத்தை வீணடிக்க முடியாது – தேர்தல் ஆணையம்

557
0
SHARE
Ad

Wan Ahmad Wan Omarகோலாலம்பூர், செப் 18 – நடந்து முடிந்த 13 வது பொதுத்தேர்தலில் 40,000 போலி வாக்காளர்கள் வாக்களித்துள்ளதாக எதிர்கட்சியினர் கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று தேர்தல் ஆணையத்தின் துணைத் தலைவர் வான் அகமட் வான் ஓமார் கூறியுள்ளார்.

தேர்தல் ஆணையத்திற்கு பல்வேறு பணிகள் இருக்கிறது. அதையெல்லாம் விடுத்து, தேர்தல் விதிமுறைகளை சரியாகப் புரிந்து கொள்ளாமல் ஜசெக மற்றும் பாஸ் கட்சிகள் கூறும் குற்றச்சாட்டுகளை ஆராய்ந்து கொண்டிருக்க முடியாது என்றும் ஓமார் தெரிவித்துள்ளார்.

“நான் ஏற்கனவே கூறியது போல் தேர்தல் ஆணையத்தின் மீது களங்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் தான் இது போன்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. இது போன்ற குற்றச்சாட்டுகளின் மூலம் எதிர்கட்சிகள் மக்களின் மனதில் இடம் பிடிக்கலாம் என்று நினைக்கிறார்கள்” என்று ஓமார் கூறியுள்ளார்.

#TamilSchoolmychoice

தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளைப் புரிந்து கொண்டு செர்டாங் தொகுதியில் எந்த ஒரு தேர்தல் முறைகேடுகளும் நடக்கவில்லை என்பதை ஜசெக கட்சியைச் சேர்ந்த ஓங் கியான் மிங் மட்டும் தான் ஏற்றுக்கொண்டார். அதனால் தான் அவரது தொகுதியில் ஓங் வெற்றிபெற்றார்.

வாக்களிப்பு நாள் அன்று சுவா லாய் ஃபாட் என்ற 30 வயது கட்டிடத் தொழிலாளி ஒருவர் வாக்களிக்க வந்த போது, ஜசெக கட்சியைச் சேர்ந்தவர்களும், ஓங் கியான் மிங்கும் அவரை வெளிநாட்டினர் என்று குற்றம்சாட்டினர். பின்னர் தேர்தல் ஆணைய அதிகாரிகள் கூறியதைத் தொடர்ந்து, ஓங் தனது செயலுக்கு மன்னிப்பு கேட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.