இது குறித்து தேர்தல் ஆணையத் தலைவர் டான்ஸ்ரீ அப்துல் அஸீஸ் யூசோப் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “66 வயது பூர்த்தியாகிவிட்ட அவர் தனது பணியிலிருந்து விலகுகிறார். கூட்டரசு அரசியலமைப்பின் 114(3) பிரிவின் கீழ் அவரது பணி ஓய்வு அமைத்திருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.
தேர்தல் ஆணையத்தில் பணியாற்றிய இந்த 16 ஆண்டு காலங்களில் வான் ஓமார், கடந்த 1999,2004, 2008, 2013 ஆகிய 4 பொதுத்தேர்தல்களில் பணியாற்றியிருக்கிறார். அதோடு கடந்த 1998 ஆம் ஆண்டு முதல் 2013 ஆம் ஆண்டு வரை நாட்டில் நடைபெற்ற 42 இடைத்தேர்தல்களிலும் பணியாற்றியிருக்கிறார்.
மேலும், கடந்த 2004 ஆம் ஆண்டு டிசம்பர் 17 ஆம் தேதி முதல் தேர்தல் ஆணையத்தின் துணைத் தலைவராகப் பொறுப்பேற்ற வான் ஓமார், தயாரிப்புக் குழு செயலவைத் தலைவர், வாக்காளர் கல்வி, பயிற்சி, தகவல் பிரிவு ஆகியவற்றின் பொறுப்பாளராகவும் கடையாற்றியுள்ளார் என்று அப்துல் அஸீஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.