Home 13வது பொதுத் தேர்தல் வாக்குச்சீட்டுகள் வாங்கப்படவில்லை – தேர்தல் ஆணையம் திட்டவட்டம்

வாக்குச்சீட்டுகள் வாங்கப்படவில்லை – தேர்தல் ஆணையம் திட்டவட்டம்

607
0
SHARE
Ad

Spr-Election-INK-300x202கோலாலம்பூர், ஜூன் 6 – பொதுத்தேர்தலின் போது திரங்கானு மாநிலத்தில் தேசிய முன்னணியைச் சேர்ந்த வேட்பாளர் ஒருவர் தேர்தல் ஆணைய அதிகாரிகளின் வாக்குச்சீட்டுக்களை 100 ரிங்கிட் கொடுத்து வாங்கியதாக நேற்று பிகேஆர் வியூக இயக்குனர் கூறியதை தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.

தேசிய முன்னணியை வெற்றி பெறச் செய்யும் நோக்கில் அவ்வாறு வாக்குச்சீட்டுக்கள் வாங்கப்பட்டதாகக் கூறுவதில், தேர்தல் ஆணையத்திற்கு எந்த சம்பந்தமும் இல்லை என்று அதன் துணைத்தலைவர் டத்தோ வான் அகமட் வான் ஓமார் தெரிவித்துள்ளார்.

மேலும் “ரபிஸி கூறுவது போல் அஞ்சல் வாக்குகளில் குறியிட்டது, லஞ்சம் வழங்கியது போன்ற எந்த ஒரு முறைகேடுகளும் நடைபெறவில்லை. அவர்கள் கூறிய குற்றச்சாட்டுக்கு வலுவான ஆதாரமிருந்தால் காவல்துறையிலோ அல்லது மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திடமோ புகார் செய்யட்டும்” என்றும் ஓமார் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

“பொதுத்தேர்தல் பணிகளுக்காக சுமார் 2 லட்சத்து 30 ஆயிரம் பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர். அவர்களில் 1 லட்சம் பேர் வாக்களிப்பு மையங்களில் பணியாற்றினர். ஒவ்வொரு பணியாளரும் தேர்தல் விதிமுறைகளைப் பின்பற்றியிருப்பதோடு, தங்கள் கடமையையும் நேர்மையான முறையில் செய்தனர்” என்று ஓமார் தெரிவித்தார்.