Home வணிகம்/தொழில் நுட்பம் 3 கோடிக்கு ஏலம் போன அரிய வைரம்

3 கோடிக்கு ஏலம் போன அரிய வைரம்

546
0
SHARE
Ad

imageஹாங்காங், அக் 9- உலகின் ஏல நிறுவன வரலாற்றில் முதன்முறையாக ஹாங்காங்கில் நேற்று நடைபெற்ற ஏலத்தில் அரிய வகை வைரம் ஒன்று 3 கோடி டாலர்களுக்கு ஏலம் போனது.

பிரபல சோத்பை ஏல நிறுவனம் இந்த முட்டை வடிவ வைரத்தை ஏலம்விட போவதாக அறிவித்த போது 2 கோடியே 80 லட்சம், மூன்றரை கோடி டாலர்களுக்கு இடையே இது விலை போகும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஹாங்காங்கில் நேற்று 6 நிமிடங்கள் நீடித்த இந்த ஏலத்தின் போது தொலைபேசி மூலம் ஏலம் கேட்ட ஒருவர் இறுதியாக 238.68 கோடி ஹாங்காங் டாலர்களுக்கு இந்த வைரத்தை தனதாக்கி கொண்டார்.

#TamilSchoolmychoice

தென்னாப்பிரிக்காவில் உள்ள வைர சுரங்கத்தில் வெட்டி எடுக்கப்பட்ட போது இந்த வைரம் 299 கேரட் எடை கொண்டதாக இருந்தது. பட்டை தீட்டி இந்த வடிவத்திற்கு வந்துள்ள அதன் தற்போதைய எடை 118.28 கேரட் என குறிப்பிடப்பட்டுள்ளது.