Home வணிகம்/தொழில் நுட்பம் அதிகப் புகழ்பெற்ற கையடக்கக் கணினியாக ஆப்பிள் நிறுவனத்தின் ஐபேட் 2 தொடருகிறது! ஐபோன் 5C தேவை...

அதிகப் புகழ்பெற்ற கையடக்கக் கணினியாக ஆப்பிள் நிறுவனத்தின் ஐபேட் 2 தொடருகிறது! ஐபோன் 5C தேவை அதிகரிப்பு!

527
0
SHARE
Ad

அக் 23-ஆப்பிள் ஐபோன் 5Cக்கும் ஐபோன் 5Sக்கும் இடையிலான இடைவெளி வெகுவாக குறைந்துள்ளதாக லோக்கலாய்ட்டி நிறுவனம் அண்மையில் மேற்கொண்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.

அ

அமெரிக்காவில் ஒவ்வொரு ஐபோன் 5C புதிதாக பயன்படுத்த தொடங்கப்படும் பொழுது  ஐபோன் 5S கைத்தொலைப்பேசியின் எண்ணிக்கை 1.9-ஆக இருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்தது.

#TamilSchoolmychoice

உலகளவில் ஐபோன் 5C ஒன்றுக்கு ஐபோன் 5S 2.3 என்ற எண்ணிக்கையில் உள்ளது. இந்த எண்ணிக்கை கடந்த சில வாரங்களைக் காட்டிலும் தற்போது சீரடைந்துள்ளது. இதற்கு முன்பு, ஐபோன் 5S கைத்தொலைப்பேசி ஐபோன் 5C கைத்தொலைப்பேசியை விட 3.3 என்ற நிலையில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஐஐ

மேலும், மேற்கண்ட நிறுவனம் 20 மில்லியன் ஐபோன் கருவிகளைக் கொண்டு ஆய்வு செய்ததில் மேம்பாடு அடைந்த இதர நாடுகளைப் போலவே அமெரிக்க சந்தையிலும் விலை குறைந்த ஐபோன் கருவிகள் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.

ஆப்பிள் ஐபோன்கள் இப்போது அதிகமாக விற்கப்பட்டாலும் எதிர்காலத்தில் இந்நிலை தொடர்ந்து இருக்குமா? என்பது கேள்விக்குறியே என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.