Home Featured வணிகம் மீண்டும் விற்பனைக்கு வருகிறது 4-அங்குல ஐபோன்!

மீண்டும் விற்பனைக்கு வருகிறது 4-அங்குல ஐபோன்!

575
0
SHARE
Ad

iphone-4புது டெல்லி – மேற்கத்திய நாடுகள் மட்டுமல்ல ஆசிய அளவிலும் திறன்பேசிகள் வர்த்தகத்தில் ஆப்பிள் தனது ஆளுமையை நிலைநாட்டி வருகிறது. குறிப்பாக கடந்த காலத்தில் இந்தியாவை அதிகம் கண்டுகொள்ளாமல் இருந்து வந்த ஆப்பிள் நிறுவனம், இங்கு ஐபோன் 6 மற்றும் அதனைத் தொடர்ந்து வெளியான தனது புதிய தயாரிப்புகளுக்கு கிடைத்த வரவேற்பை நினைத்து ஆச்சரியமடைந்தது.

இந்திய சந்தைகளுக்கான வர்த்தகத்தின் தீவிரத்தை உணர்ந்த தருணம் முதல், ஆப்பிள் இங்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. இந்தியர்களின் இந்த ஆதரவிற்காக ஆப்பிள் தலைவர் டிம் குக் தனிப்பட்ட முறையில் நன்றி தெரிவித்ததன் மூலமே அதனை அறிந்து கொள்ளலாம்.

இந்நிலையில், ஆப்பிள் அடுத்து தனது புதிய ஐபோனை வெளியிடும் தருணத்தில், அந்நிறுவனத்தின் பழைய தயாரிப்பான 4 அங்குல ஐபோன்களையும் புதுப்பித்து வெளியிட முடிவு செய்துள்ளது. இதில் குறிப்பிடத்தக்க ஒன்று என்னவென்றால், இந்த ஐபோனின் விலை மட்டும் மற்ற ஐபோன்களை விட குறைவானதாக இருக்கும் என்று ஆருடங்கள் கூறப்படுகின்றன.