சென்னை – நாட்டில் மத ரீதியான சகிப்புத்தன்மை குறைந்து வரும் நிலையில், எழுத்தாளர்களும், கலைஞர்களும் தாங்கள் பெற்ற விருதுகளை அரசிடமே திரும்ப ஒப்படைத்து வருகின்றனர். இந்நிலையில் இது தொடர்பாக பத்திரிக்கையாளர்கள் நடிகர் கமல்ஹாசனிடம் கேள்வி எழுப்பினர்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
“நாட்டில் சகிப்புத்தன்மை குறைந்து வருகிறது என்பதற்காக விருதுகளைத் திருப்பித் தருவதால் ஒரு பயனும் இல்லை. விருதுகளை திரும்ப ஒப்படைப்பவர்கள் நினைத்தால் ஒரு சில நொடிகளில் இந்த விவகாரம் தொடர்பாக அனைவரின் கவனத்தையும் ஈர்க்க முடியும். அவர்களின் ஒரு கட்டுரை போதும் இந்த பிரச்சனைக்கான கவனஈர்ப்பு பெறுவதற்கு. அதனால் இந்த விவகாரத்தை அறிவிப்பூர்வமாக அணுக வேண்டும்”
“விருதுகளை திரும்பக் கொடுப்பது அரசை அவமதிக்கும் செயல் என்பது எனது கருத்து” என்று அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், “சகிப்புத்தன்மையின்மை என்பது இப்போது உருவானதல்ல 1947-லேயே உருவானது. அன்று நடந்த தவறால், இந்தியா, பாகிஸ்தான் பிளவுபட்டது. ஒருவேளை இரு நாடுகளும் இணைந்து இருந்தால், சீனாவை விட மிகப் பெரிய நாடாக இருந்திருக்கலாம்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.