Home உலகம் மாலத்தீவில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டது!

மாலத்தீவில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டது!

690
0
SHARE
Ad

maldivமாலி – மாலத்தீவில் அரசுக்கு எதிராக மக்கள் போராட்டம் பெரிய அளவில் உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்நாட்டின் அதிபர் அப்துல்லா யமீன், அடுத்த 30 நாட்களுக்கு அவசரநிலை பிரகடனப்படுத்தியுள்ளார்.

கடந்த மாதம் மாலத்தீவு அதிபர் அப்துல்லா யமீனும், அவரது மனைவியும் பயணம் செய்த படகு ஒன்றில் வெடி விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் அதிபரை கொல்வதற்காக திட்டமிட்டு நடத்தப்பட்டது என்று கூறப்பட்டது. இதனைத் தொடர்ந்து நடந்த விசாரணையில், அந்நாட்டின் துணை அதிபர் அகமது அக்தீப்பிற்கு, இந்த சம்பவத்தில் தொடர்பு இருப்பதாகக் கூறி கடந்த மாதம் மாலத்தீவு காவல்துறை அவரை கைது செய்தது.

எனினும் அங்கு பிரச்சனை ஓய்ந்த பாடில்லை. இந்த சம்பவத்தை ஆரம்பம் முதல் விசாரணை செய்த புலனாய்வுத் துறை, அதிபர் படகில் குண்டு வெடிப்பு நிகழ்ந்ததற்கான ஆதாரமே இல்லை என்று கூறி புதிய சர்ச்சையை கிளப்பியது. இதனால் ஆத்திரம் அடைந்த துணை அதிபரின் ஆதரவாளர்களும், பொது மக்களும் அரசுக்கு எதிராக போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

#TamilSchoolmychoice

நிலைமை மோசமாவதை உணர்ந்த அந்நாட்டு அதிபர், அவசர நிலையை பிரகடனப்படுத்தி உள்ளார்.