Home Featured நாடு தாப்பா கொலை: 20 மனித எலும்புத் துண்டுகள் கைப்பற்றப்பட்டன!

தாப்பா கொலை: 20 மனித எலும்புத் துண்டுகள் கைப்பற்றப்பட்டன!

596
0
SHARE
Ad

main_ha_0411_p3_hazlin_1ஈப்போ – தாப்பா தொடர் கொலை வழக்கில் தினமும் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன.

நேற்று தாப்பாவிலுள்ள ஜாலான் பகாங் என்ற இடத்திலுள்ள வாகனங்கள் பழுதுபார்க்கும் பட்டறையிலிருந்து 20 சிறிய மனித எலும்புத் துண்டுகளை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

“அந்த எலும்புத் துண்டுகள் முற்றிலும் எரிந்து போயிருக்கும் நிலையில், அதிலிருந்து எவ்வளவு மரபணு சோதனைகளை மேற்கொள்ளலாம் என்பதை தீர்மாணித்து வருகின்றோம். பெரிய எலும்பு கிடைத்தால், இந்த வழக்கில் ஒரு திருப்பத்தை அடைய முடியும்” என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளுள் ஒருவர் தெரிவித்துள்ளதாக ஸ்டார் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

#TamilSchoolmychoice

இந்த வழக்கில் சந்தேகிக்கப்படும் முக்கியக் குற்றவாளியும், அவரது 20 வயது மகனும் நேற்று கொலை நடந்த அந்த வாகனங்கள் பழுது பார்க்கும் பட்டறைக்கு அழைத்து வரப்பட்டனர்.

அவர்களிடமிருந்து வாக்குமூலம் பெற்ற காவல்துறை, அங்கு மோப்ப நாய்களுடன் வந்து ஆதாரங்களைக் கைப்பற்றியிருக்கலாம் என நம்பப்படுகின்றது.