Home நாடு தாப்பா மக்களுக்கு சரவணன் தீபாவளி அன்பளிப்பு – 17 ஆண்டுகளாகத் தொடரும் நற்சேவை!

தாப்பா மக்களுக்கு சரவணன் தீபாவளி அன்பளிப்பு – 17 ஆண்டுகளாகத் தொடரும் நற்சேவை!

171
0
SHARE
Ad

தாப்பா : கடந்த 4 தவணைகளாக தாப்பா நாடாளுமன்றத் தொகுதியைக் கடுமையானப் போட்டிகளுக்கிடையில் தற்காத்து வருபவர் டத்தோஸ்ரீ எம்.சரவணன். அந்தத் தொடர் வெற்றிகளுக்கு முக்கியக் காரணமாகத் திகழும் தாப்பா இந்திய சமூகத்தில் வசதி குறைந்த மக்களுக்கு கடந்த அக்டோபர் 26-ஆம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சிகளில் தீபாவளி அன்பளிப்புகளை வழங்கி அவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் ஊட்டினார் சரவணன்.

சரவணன் தொடர்ச்சியாக கடந்த 17 ஆண்டுகளாக இவ்வாறு தீபாவளி அன்பளிப்புகளை வழங்கி வருகிறார் என்பதும் தாப்பா மக்கள் மனதில் அவர் நிலைத்திருப்பதற்கும் ஒரு காரணம் என்றால் அது மிகையில்லை.

தீபாவளி நெருங்கி வரும்போது, ​​இந்த மகிழ்ச்சியான தருணத்தில் அன்பு, கருணை, ஒற்றுமை ஆகியவற்றை அனவரும் நினைவில் கொள்வது சிறந்தது. இதனைத் தவறாமல் கடைப்பிடித்து வரும் சரவணன் ஒவ்வொரு தீபாவளித் திருநாளின் போதும் தாப்பா நாடாளுமன்றத் தொகுதி மக்களுக்குக் இவ்வாறு நலத் திட்டங்களை வழங்குவதைத் தனது கடமையாகக் கொண்டுள்ளார்.

#TamilSchoolmychoice

கடந்த அக்டோபர் 26-ஆம் தேதியன்று தாப்பாவில் 1500 குடும்பங்களுக்குத் தீபாவளி அன்பளிப்பு வழங்கப்பட்டது. எனினும் நேரடியாக சரவணனிடம் இருந்து அன்பளிப்பு பெற்றவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்துக்கும் மேல் என மதிப்பிடப்படுகிறது.

தீபாவளிக்கு மட்டுமின்றி, நோன்புப் பெருநாள், சீனப்பண்டிகை, கிறிஸ்மஸ் போன்ற பண்டிகைகளின்போதும் அந்தப் பெருநாட்களைக் கொண்டாடும் தாப்பாவில் உள்ள அனைத்து சமூகத்தினருக்கும் இத்தகைய அன்பளிப்புகளை சரவணன் வழங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.