இது குறித்து இன்று காலை மகாதீர் புத்ரஜெயாவில் வெளியிட்ட கருத்தில், “அம்னோ தேர்தலில் ஊழலை ஒழித்து விட்டதாக எங்களிடம் கூறினார்கள். ஆனால் அதை நாங்கள் நம்பவில்லை. இதில் மில்லியன் கணக்கில் நிறைய பணத்தை வாரி வழங்கியுள்ளனர். அதனால் தான் வாக்குகள் கிடைக்காதவர்களுக்குக் கூட அதிக வாக்குகள் கிடைக்கப்பெற்று வெற்றியடைந்துள்ளனர்” என்று மகாதீர் தெரிவித்தார்.
அம்னோ தேர்தலில் உதவித் தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட மகாதீரின் மகனான முக்ரிஸ் தோல்வியைத் தழுவினார் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments