Home இந்தியா எதிர்க்கட்சியாக இருக்க விரும்பும் சோனியா: மகனை பிரதமராக்கும் கனவு பலிக்குமா?

எதிர்க்கட்சியாக இருக்க விரும்பும் சோனியா: மகனை பிரதமராக்கும் கனவு பலிக்குமா?

629
0
SHARE
Ad

20110403-soniya-rahul-630

புதுடில்லி, அக் 28- தேர்தலுக்கு பின் அமைய இருக்கும் அடுத்த லோக்சபாவில் எதிர்க்கட்சி இருக்கையில் அமரவே காங்கிரஸ் தலைவர் சோனியா விரும்புவதாக தெரிகிறது. நாட்டின் தேசிய கட்சி தலைவரான சோனியா, தேர்தலில் வெற்றியை இழக்கவும் மீண்டும் மத்தியில் ஆட்சி அமைக்க வேண்டும் என்ற தனது கனவை தியாகம் செய்யவும் நினைப்பதற்கு தனது தனிப்பட்ட ஆதாய நோக்கம் காரணமாக இருக்குமோ என அரசியல் வட்டாரத்தில் சந்தேகம் எழுந்துள்ளது.

வரும் தேர்தலில் தோற்க வேண்டும் என நினைத்து அரசியல் கணக்கு போட்டு வருகிறார் சோனியா. ஒன்றை இழந்தால் தான் மற்றொன்றை பெற முடியும் என நோக்கத்தில் லோக்சபா தேர்தலில் தோல்வியடைய வேண்டும் என சோனியா கருதுவதாக கூறப்படுகிறது. 2014ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்க வாய்ப்பில்லை என தற்போதைய கருத்து கணிப்புக்கள் கூறி வருகின்றன.

#TamilSchoolmychoice

அவ்வாறு பெரும்பான்மை கிடைக்காத பட்சத்தில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்தாலும் தொங்கு பார்லி., அல்லது 3வது அணி தலைமையிலான ஆட்சி அமையும் நிலை உருவாகும். தொங்கு பார்லி., அமைந்தால் நாட்டில் குழப்பம் மட்டுமே ஏற்படும். இதனால் நிலையானதொரு ஆட்சியை வழங்க முடியாத சூழ்நிலை ஏற்படும். அவ்வாறு நடந்தால் ஆளும்கட்சியால் நிலையான ஆட்சியை தரமுடியவில்லை என்ற குற்றச்சாட்டை முன் வைத்து ஆட்சியை களைத்து மீண்டும் தேர்தல் வர வாய்ப்புள்ளது.

அந்த தேர்தல் மக்களுக்கு ஏற்படும் குழப்ப நிலையை பயன்படுத்தி பெரும்பான்மையை நிரூபித்து வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடிக்க காங்கிரஸ் திட்டமிட்டு வருகிறது. அத்தகைய சூழ்நிலையில் ராகுலை பிரதமராக்கி விடவும் சோனியா திட்டம் வகுத்து வருவதாக கூறப்படுகிறது. இதன்மூலம் கட்சிக்கு ஆதாயம் தேடவும், ராகுலை பிரதமராக்க வேண்டும் என்ற சோனியாவின் கனவை நினைவாக்க திட்டம் வகுக்கப்படுகிறது.

2014ம் ஆண்டு யாருக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் என்பது இதுவரை தெளிவாகவில்லை. அடுத்த மாதம் நடைபெற உள்ள 5 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகளே, லோக்சபா தேர்தலின் முன்னோட்டமாக இருக்கும் என கூறப்படுகிறது. 5 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் காங்கிரசிற்கு நெருக்கடி அளிக்கும் வகையில் இருக்கும் என சில காரணங்கள் கூறப்பட்டாலும், 5ல் 4 மாநிலங்களில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி வெற்றி பெறும் என கூறப்படுகிறது.

மம்தா பானர்ஜி தனது மாநிலத்தில் ஐக்கிய முற்போக்கு கூட்டணியை விட பெரும்பான்மை பெற்றுள்ளார். இதனால் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்து விலகுவது குறித்து அவர் யோசிக்க மாட்டார். அவ்வாறு முற்றிலுமாக விலகினால் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் பலம் சரியும். கேரளாவிலும் காங்கிரஸ் தனது பலத்தை இழந்து வருகிறது. தமிழகத்தில் நடைபெற இருக்கும் இடைத்தேர்தலில் காங்கிரசிற்கு ஓட்டளிப்பது குறித்து வாக்காளர்கள் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என வற்புறுத்தப்பட்டாலும், காங்கிரஸ் படுதோல்வி அடைவது உறுதியாகி உள்ளது.

கூட்டணி கட்சிகளில் திரிணாமுல் காங்கிரசின் பலம் அதிகரித்து வருவதும், திமுக.,வின் பலம் குறைந்து வருவதும் காங்கிரஸ் மீண்டும் ஆட்சி அமைக்கும் வாய்ப்பை நிலையற்றதாக்கி உள்ளது. மேலும் காங்கிரசிற்கு எதிரான ஊழல் புகார்களும் அக்கட்சியை பலவீனமாக்கி வருகிறது. இதன் மூலம் தொங்கு பார்லி., அமைவது அல்லது 3வது அணி உருவாவது தெளிவாகி உள்ளது. இதனை கருத்தில் கொண்டே சோனியா தனது புதிய திட்டத்தை வகுத்து வருகிறதாக கூறப்படுகிறது.

காங்கிரசின் தேர்தல் பிரசாரமோ இளைஞர்களை ஈர்க்கும் வகையில் இருக்க திட்டமிடப்பட்டுள்ளது. பல்வேறு ஊழல் புகார்கள், அமைச்சர்களை கட்டுக்குள் வைக்காதது போன்ற புகார்களால் மன்மோகன் சிங்கிற்கு மக்கள் மத்தியில் நன்மதிப்பு குறைந்துள்ளது. அதே சமயம் காங்கிரஸ் மீண்டும் ஆட்சி அமைத்தால் மன்மோகன் சிங்கிற்கு பிரதமர் பதவிக்கு பதில் ஜனாதிபதி பதவி வழங்க வாய்ப்புள்ளது. மன்மோகன் பிரதமர் இல்லை என்றால் அடுத்தது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. 2004ம் ஆண்டிலேயே பிரதமர் பதவி தேவையில்லை என சோனியா ஒதுங்கி விட்டார். இதனால் வேறு வழியின்றி கட்சியினரின் அடுத்த தேர்வு ராகுலாக மட்டுமே இருக்கும்.

ஆனால் 2014 தேர்தலுக்கு முன் ராகுலை பிரதமர் வேட்பாளராக அறிவித்தால், காங்கிரசிற்கு ஓட்டு கிடைப்பது சந்தேகமான ஒன்று. இதனை கருத்தில் கொண்டே காங்கிரஸ் தனது பிரதமர் வேட்பாளரை அறிவிப்பதில் மவுனம் காட்டி வருகிறது. அனுபவம் இல்லை என்றாலும் தனது மகனை பிரதமராக அனைவரும் ஏற்றுக் கொள்ளும் நிலை வந்த பிறகே, அவரை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க சோனியா நினைத்து வருவதாக கூறப்படுகிறது.