Home இந்தியா பாட்னா குண்டு வெடிப்பு நடந்த சதி ; முஜாகிதீன் பயங்கரவாத அமைப்பு தொடர்பு ; பழி...

பாட்னா குண்டு வெடிப்பு நடந்த சதி ; முஜாகிதீன் பயங்கரவாத அமைப்பு தொடர்பு ; பழி தீர்க்க வைத்ததாக விசாரணை தகவல்

450
0
SHARE
Ad

blast2_1632772g

பாட்னா, அக் 28- பீகார் மாநிலத்தில் நரேந்திரமோடி பங்கேற்ற கூட்டத்தில் நடந்த குண்டு வெடிப்புக்கு இந்தியன் முஜாகிதீன் பயங்கரவாத அமைப்புக்கு தொடர்பு இருக்கலாம் என மத்திய உள்துறை அமைச்சக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக, தகவல் அறிந்த வட்டாரம் தெரிவிக்கிறது. 8 பேர், 3 குழுக்களாக பிரிந்து பல இடங்களில் குண்டு வெடிப்பை நிகழ்த்தியதாகவும் தெரிய வந்துள்ளது.

நேற்று ( ஞாயிற்றுக்கிழமை) பாட்னா காந்தி மைதானத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் தொடர் குண்டு வெடிப்பு நடந்தது. முதல் குண்டு ரயில்வே நிலைய கழிவறை மற்றும் குளியலறையில் வெடித்தது. தொடர்ந்து மோடி பேசவிருந்த மைதானத்தை சுற்றிலும் மொத்தம் 8 இடங்களில் குண்டு வெடித்ததது. இது நாட்டு வெடி குண்டாக இருந்ததால் பெரும் உயிர்ச்சேதம் ஏதும் இல்லாமல் முடிந்தது. இருப்பினும் சிகிச்சை பலன் இன்றி இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளனர். 90 க்கும் மேற்பட்டோர் காயமுற்றனர்.

#TamilSchoolmychoice

சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் கண்டறியப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் என பிரதமர் தனது கண்டனத்தை பதிவு செய்தார். இந்த குண்டு வெடிப்பை நிகழ்த்தியது யார் என்ற கோணத்தில் மத்திய புலனாய்வு படையினர் துரிதமாக விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக உடனடியாக 4 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இதில் கைதான இமிதியாஸ் என்பவனிடம் போலீசார் துருவி, துருவி விசாரித்ததில் சில முக்கிய ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக உள் துறை அதிகாரிகள் வட்டாரத்தில் கூறப்படுகிறது.

அதாவது இமிதியாஸ் என்பவன் உள்பட சிலர் இந்த குண்டு வெடிப்பை நிகழ்த்தியதாகவும், இதில் முகம்மது தெசீன் அக்தர் என்பவன் மூளையாக செயல்பட்டுள்ளான். இவன் தான் குக்கர் வெடிகுண்டுகள் செய்து கொடுத்துள்ளான். எந்த , எந்த இடத்தில் வைக்க வேண்டும் என்று திட்டமிட்டு கொடுத்துள்ளான். இந்தியன் முஜாகிதீன் பயங்கரவாத அமைப்பு நிறுவனர் யாசின் பட்கல் சமீபத்தில் ஆப்கன் எல்லையில் கைது செய்யப்பட்டான். இவனது நெருங்கிய நண்பனாக முகம்மது தெசீன். இவனை தற்போது கைது செய்யப்பட்டுள்ள இமிதியாஸ் சமீபத்தில் சந்தித்து பேசியதாகவும் தெரிய வந்துள்ளது. உள்துறை அமைச்சக வட்டாரம் தெரிவிக்கிறது.

உ .பி., சம்பவத்திற்கு பழிக்கு பழியா ? சமீபத்திய உ .பி., மாநிலம் முஷாப்பர் நகர் கலவரத்தில் பாதிக்கப்பட்டதற்காக பழி தீர்க்கும் வகையில் இந்த குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்த்தப்பட்டிருக்கலாம் என்றும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இது தொடர்பாக அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் சில மணி நேரத்தில் அதிகாரிகள் நிருபர்களுக்கு தெரிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் பாட்னா குண்டு வெடிப்பு தொடர்பாக 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் இருந்து சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

பாட்னா குண்டு வெடிப்பில் சிகிச்சை பெற்று வரும் ஒரு நபர் இன்று சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்து போனார். இத்துடன் பலி எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.

வெடிகுண்டு சம்பவம் நடத்த அதே நாளில் உள்துறை அமைச்சர் சுஷீல்குமார் ஷிண்டே டில்லியில் நடந்த ஒரு இசை நிகழ்ச்சியில் விருந்தினராக பங்கேற்றார். இதற்கு பா.ஜ., தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.