Home இந்தியா காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது: பிரதமருக்கு கருணாநிதி கடிதம்

காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது: பிரதமருக்கு கருணாநிதி கடிதம்

671
0
SHARE
Ad

karuna_1375724f

சென்னை, அக் 28-‘காமன்வெல்த் மாநாட்டில், இந்தியா பங்கேற்காது என, உடனடியாக பிரதமர் அறிவிக்க வேண்டும்’ என, பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு, தி.மு.க., தலைவர் கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளார்.

காமன்வெல்த் மாநாட்டில், இந்தியா பங்கேற்கக் கூடாது என, சட்டசபையில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு எதிராக, இலங்கைத் தூதர் கரியவாசம் கருத்து தெரிவித்துள்ளார். “காமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணித்தால், இந்தியா தனிமைப்படுத்தப்படும்’ என டில்லியில் இருந்து அவர் கூறியிருக்கிறார். மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன், “காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்றால் தான், இலங்கையில் உள்ள தமிழர்களின் பொருளாதார நிலை மேம்படும் என்றும் சட்டசபையில் அனைத்துக் கட்சிகளின் ஆதரவோடு நிறைவேற்றப்பட்ட தீர்மானம் சரியல்ல’ என்றும், கூறியிருப்பது, இலங்கைத் தமிழர் பிரச்னையில் அவர் கொண்டிருக்கும், தவறான அணுகுமுறையையே வெளிச்சம் போட்டு காட்டுகிறது.

#TamilSchoolmychoice

மத்திய அமைச்சர் வாசன், ‘இலங்கையில் நடக்க உள்ள காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்பது குறித்து, தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் விதத்தில், மத்திய அரசு நல்ல முடிவெடுக்கும் என்ற நம்பிக்கை, எங்களுக்கு உள்ளது. இந்நிலையில், காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்காவிட்டால், இந்தியா உலக அரங்கில் தனிமைப் படுத்தப்படும் என, கரியவாசம் கூறியிருப்பது கடும் கண்டனத்துக்குரியது’ என, கூறியுள்ளார்.

“பிரதமர் மன்மோகன் சிங் எனக்கு எழுதிய கடிதத்தில், காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்வது பற்றி, தி.மு.க.,வின் உணர்வுகளையும், தமிழர்களின் உணர்வுகளையும் கருத்தில் கொண்டு, அதன்படி செயல்படுவேன்’ என தெரிவித்திருக்கிறார். இதற்குப் பின்னும், சுதர்சன நாச்சியப்பன், கரியவாசத்தைப் போல கருத்து தெரிவித்திருப்பது ஏற்கத் தக்கதல்ல. காமன்வெல்த் மாநாட்டை புறக்கணிக்க போவதாக, இலங்கையின் வடக்கு மாகாணத்தில் சமீபத்தில் நடந்த தேர்தலில் மிகப் பெரும்பான்மை மக்களின், ஆதரவோடு ஆட்சி அமைத்திருக்கும் தமிழ் தேசியக் கூட்டணி முடிவு செய்துள்ள நிலையில் வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான்குர்ஷித், “காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்கப் போவதாக அறிவித்திருப்பது மிகுந்த அதிர்ச்சியையும், ஏமாற்றத்தையும் அளிக்கிறது. காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்காது என்பதை பிரதமர் உடனடியாக அறிவிக்க வேண்டும்.’ இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

‘ஏற்காடு இடைத்தேர்தலில் தேர்தல் நடத்தை விதிகளை மீறி மாணவ மாணவியருக்கு இலவச சைக்கிள்கள் வழங்கப்பட்டுள்ளன’ என்று தி.மு.க., தலைவர் கருணாநிதி குற்றம் சாட்டி உள்ளார்.

ஏற்காடு தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க., அராஜகத்தைக் கட்டவிழ்த்து விடத் தயாராகிவிட்டது போல தோன்றுகிறது. 31 அமைச்சர்கள், அவைத் தலைவர் அமைப்புச் செயலர்கள், வாரியத் தலைவர்கள், அணிகளின் செயலர்கள் என, 52 பேர் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின், ஏற்காடு தொகுதிக்கு உட்பட்ட தும்பல், பாப்பநாய்க்கன்பட்டி, வெள்ளாளப்பட்டி உட்பட பல கிராமங்களில் சேலம் மாவட்ட அதிகாரியுடன் அனுமதியுடன், பள்ளி மாணவ, மாணவியருக்கு இலவச சைக்கிள்கள், “லேப்டாப்’ போன்றவை வழங்கப்பட்டுள்ளன. இது தேர்தல் நடத்தை விதிகளை முற்றிலும் மீறிய செயல். வேட்புமனு தாக்கல் செய்யப்படுவதற்கு முன், அமைச்சர் ஒருவர் தேர்தல் விதிமுறைகளை மீறி அரசு வாகனத்தில் தேசியக் கொடியையும் பறக்க விட்டபடி பயணம் நடத்தியிருக்கிறார்.

இதுப்பற்றி முறைப்படி ஆதாரங்களோடு தமிழகத் தேர்தல் அதிகாரிகளிடம் புகார் மனு தரப்பட்டு அவரும் அமைச்சரிடம் 48 மணி நேரத்திற்குள் விளக்கம் கேட்டுள்ளார். அந்த விளக்கத்தைக் கூட அந்த அமைச்சர் நேரில் சென்று கொடுக்காமல், தன் உதவியாளர் மூலமாகக் கொடுத்து அனுப்பியிருக்கிறார். இதையெல்லாம் பார்க்கும் போது இந்த இடைத்தேர்தலில் ஆளுங்கட்சியினர் அரஜாகமாகவும் விதிமுறைகளை மதிக்காமலும் ஜனநாயக தேர்தல் முறைக்கு விரோதமாகவும் நடந்து கொள்வர் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது எனக் கருணாநிதி கூறியுள்ளார்.