Home உலகம் 30 ஆண்டுகள் நிலவிய பயங்கரவாதத்தை 3 ஆண்டுகளில் முடிவுக்கு கொண்டு வந்தோம்: ராஜபக்சே பேச்சு

30 ஆண்டுகள் நிலவிய பயங்கரவாதத்தை 3 ஆண்டுகளில் முடிவுக்கு கொண்டு வந்தோம்: ராஜபக்சே பேச்சு

565
0
SHARE
Ad

rajapakse

கொழும்பு, அக் 28- ”இலங்கையில், 30 ஆண்டுகளாக நிலவிய பயங்கரவாதத்தை, எனது அரசு மூன்று ஆண்டுகளில் முடிவுக்கு கொணடு வந்தது; உலகில் வேறெந்த நாடும் இந்த சாதனையை செய்யவில்லை,” என, அந்நாட்டு அதிபர் ராஜபக்சே தெரிவித்துள்ளார்.

இலங்கையில், அடுத்த மாதம், காமன்வெல்த் மாநாடு நடக்க உள்ளது. இதற்காக, விமான நிலையத்திலிருந்து கொழும்பு நகரம் வரை அமைக்கப்பட்டுள்ள 28 கி.மீ. சாலையை அதிபர் ராஜபக்சே நேற்று திறந்து வைத்தார். அப்போது அவர் பேசியதாவது, “இலஙகையில், 30 ஆண்டு களாக நிலவிய பயங்கரவாதத்தை, எனது அரசு மூன்று ஆண்டுகளில் முடிவுக்கு கொண்டு வந்துள்ளது. 2009, மே, 19ம் தேதிக்கு பிறகு எந்த வித பயங்கரவாத நடவடிக்கையும் நடக்கவில்லை. அமைதி நிலவுகிறது. இந்த சாதனையை, எந்த ஒரு நாடும் செய்யவில்லை.எதிர்கால சந்ததியினரின் நலனை கருத்தில் கொண்டு, அரசு செய்து வரும் நல திட்டங்களுக்கு மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.நாங்கள், நாட்டை முன்னேற்ற நினைக்கும் போதெல்லாம், சிலர் எங்களுக்கு எதிராக குற்றச்சாட்டுகளை சுமத்தி வந்தனர். இதனால், தான், நாங்கள் ஜெனிவாவில் உள்ள மனித உரிமை ஆணையத்தில் எங்கள் பதிலை சமர்பிக்க வேண்டியதாயிற்று,நாங்கள் ஒவ்வொரு ஆறு மாதமும், மனித உரிமை ஆணையத்துக்கு பதில் அளிக்க வேண்டியள்ளது. ஆனால், அவர்கள், இறுதி கட்ட சண்டையை பற்றியே பேசுகிறார்கள். 30 ஆண்டுகளாக நடந்த பயங்கரவாத நடவடிக்கைகளை பற்றி வாய் திறக்க மறுக்கின்றனர்” என  ராஜபக்சே  தெரிவித்தார்.