Home தொழில் நுட்பம் 30 சதவீதத்தினருக்கு செய்திகளை தரும் ‘பேஸ்புக்’

30 சதவீதத்தினருக்கு செய்திகளை தரும் ‘பேஸ்புக்’

513
0
SHARE
Ad

Facebook-feature

வாஷிங்டன், அக் 28- சமூக வலைதளமான “பேஸ்புக்’ மூலம் 30 சதவீத மக்கள் முக்கிய செய்திகளை அறிந்து கொள்வதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் உள்ள ஆய்வு நிறுவனம் ஒன்று 5,173 பேரிடம் இது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டது. இதில் 78 சதவீதம் பேர் பேஸ்புக்கில் வேறு காரணங்களுக்காக நுழைந்தாலும் அன்றைய செய்திகளை அறிந்து கொள்வதாகவும் 4 சதவீதம் பேர் செய்திகளை அறிவதற்காக மட்டுமே பேஸ்புக்கில் நுழைவதாகவும் தெரிவித்துள்ளனர்.

#TamilSchoolmychoice

நடுத்தர வயதான 47 சதவீதம் பேர் பேஸ்புக் மூலம் செய்திகளை அறிந்து கொள்கின்றனர். குறைந்த வயதுள்ளவர்கள் பெரியவர்களின் செய்திகளை குறைந்த அளவில் அறிந்தாலும் இந்த சமூக வலைதளம் மூலம் தங்களுடைய பொது அறிவை வளர்த்துக் கொள்கின்றனர்.

பேஸ்புக் சமூக வலைதளத்தில் 18 முதல் 29 வயது வரையுள்ளவர்களில் 34 சதவீதம் பேர் கணக்கு வைத்துள்ளனர்.இந்த வலைதளம் மூலம் பல்வேறு தகவல்கள் முகவரிகள் மற்றும் முக்கிய செய்திகளை அவர்கள் அறிந்து கொள்வதாக ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.