Home இந்தியா நாடாளுமன்றத் தேர்தலுக்கு தயாராகுங்கள் – சோனியா

நாடாளுமன்றத் தேர்தலுக்கு தயாராகுங்கள் – சோனியா

951
0
SHARE
Ad

sonia-gandhi_60

டெல்லி, டிசம்பர் 18- நாடாளுமன்றத் தேர்தலுக்கு தயாராகுமாறு காங்கிரஸ் கட்சியினருக்கு, கட்சித் தலைவர் சோனியா காந்தி அழைப்பு விடுத்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் பேசிய அவர் கட்சியினரை நாடாளுமன்றத் தேர்தலுக்கு தயாராகுமாறு அழைப்பு விடுத்தார்.

கடந்த 10 ஆண்டுகளில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு பல்வேறு சாதனைகளை படைத்துள்ளதாக கூறிய அவர், இந்த திட்டங்களை மக்களிடம் சரியான முறையில் கொண்டு செல்லாததே 4 மாநில சட்டப்பேரவை தேர்தல் தோல்விக்கு காரணம் என்று குறிப்பிட்டார்.

#TamilSchoolmychoice

இந்த தோல்வியால் கட்சியினர் துவண்டு விட தேவையில்லை என்று கூறிய சோனியா காந்தி, மக்களிடம் சென்று காங்கிரஸ் ஆட்சியின் திட்டங்களை விளக்க வேண்டும் என்றும் கட்சியினரை கேட்டுக் கொண்டார். இந்த கூட்டத்தில் பேசிய பிரதமர் மன்மோகன், நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை காங்கிரஸ் கட்சியினர் ஒரு போதும் அளிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்.

சில கட்சிகள் நிறைவேற்றவே முடியாத வாக்குறுதிகளை மக்களுக்கு அளித்துள்ளதாக ஆம் ஆத்மியின் பெயரைச் சொல்லாமல் அவர் விமர்சித்தார். இந்த கூட்டத்தில் ஐ.மு.கூட்டணி அரசின் 10 ஆண்டு கால சாதனைகள் அடங்கிய புத்தகம் வெளியிடப்பட்டது.