Home இந்தியா சோனியா சொத்து மதிப்பு: இணையதளம் வாபஸ்

சோனியா சொத்து மதிப்பு: இணையதளம் வாபஸ்

571
0
SHARE
Ad

SoniaGandhi_PTI

புதுடில்லி, டிசம்பர் 4- ‘காங்கிரஸ் தலைவர் சோனியாவுக்கு 1 லட்சம் கோடி ரூபாய் சொத்து இருக்கிறது’ என நேற்று முன்தினம் செய்தி வெளியிட்ட அமெரிக்காவின் ‘ஹபிங்டன் போஸ்ட்’ இணையதளம், நேற்று உலகின் கோடீஸ்வர தலைவர்கள் பட்டியலில் இருந்து சோனியா மற்றும் கத்தார் நாட்டின் முன்னாள் மன்னர் ஹமித் பெயர்களை நீக்கி உள்ளது.

இதுகுறித்து, அந்த இணையதளத்தின் ஆசிரியர் எழுதியுள்ள குறிப்பில் ‘காங்கிரஸ் தலைவர் சோனியாவின் சொத்து மதிப்பு குறித்து, எங்களுக்கு  மூன்றாம் நபர் நிறுவனம் ஒன்று செய்தி அளித்தது.

#TamilSchoolmychoice

அது சரியானதாக இல்லை என தெரிய வந்ததும் செய்தி அளித்த நிறுவனத்திடம் தகவல் கேட்டுள்ளோம். அந்தச் செய்தியால் ஏற்பட்ட குழப்பங்களுக்கு வருந்துகிறோம்’ என, எழுதி உள்ளார்.

இதனை தொடர்ந்து இப்பட்டியல் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.