Home இந்தியா டெல்லி தேர்தலில் விறுவிறுப்பான ஓட்டுப்பதிவு

டெல்லி தேர்தலில் விறுவிறுப்பான ஓட்டுப்பதிவு

541
0
SHARE
Ad

29a7ad24-98e3-4921-99b7-c188f61fe778_S_secvpf

புதுடெல்லி, டிசம்பர்  4– டெல்லியில் மொத்தம் 70 சட்டசபை தொகுதிகள் உள்ளன. அங்கு ஆட்சியைக் கைப்பற்ற ஆளும் காங்கிரஸ், பா.ஜ.க., அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி ஆகிய 3 கட்சிகளிடையே கடும் போட்டி நிலவுகிறது.

70 தொகுதிகளில் மொத்தம் 810 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். காங்கிரஸ், ஆம்ஆத்மி ஆகிய இரு கட்சிகளும் 70 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன.

#TamilSchoolmychoice

பா.ஜ.க. 66 தொகுதிகளிலும் பகுஜன் சமாஜ் கட்சி 69 தொகுதிகளிலும் வேட்பாளர்களை இறக்கியுள்ளது. மாநில கட்சிகளான தேசியவாத காங்கிரஸ், சமாஜ்வாடி தே.மு.தி.க. ஆகிய கட்சிகளும் சில தொகுதிகளில் போட்டியிடுகின்றன.

கடந்த ஒரு மாதமாக டெல்லியில் அனல் பறக்கும் பிரசாரம் நடந்தது. இன்று (புதன்கிழமை) காலை 8 மணிக்கு அங்கு 70 தொகுதிகளிலும் ஓட்டுப் பதிவு தொடங்கியது. வாக்காளர்கள் ஆர்வமுடன் வந்து வாக்களிப்பதால் விறு விறுப்பான ஓட்டுப்பதிவு நடந்து வருகிறது.

காங்கிரஸ் தலைவர் சோனியா, துணைத் தலைவர் ராகுல்காந்தி, முதல் – மந்திரி ஷீலா தீட்சித் ஆகியோர் நிர்மான்பவன் ஓட்டுச்சாவடியில் வாக்களித்தனர். ஆம்ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் அனுமான் சாலையில் உள்ள வாக்குச் சாவடிக்கு சென்று தன் வாக்கை பதிவு செய்தார்.

பா.ஜ.க. முதல்–மந்திரி வேட்பாளர் டாக்டர் ஹர்ஷ்வர்தன் கிருஷ்ணா நகர் வாக்குச் சாவடியில் காலை 9.02 மணிக்கு ஓட்டு போட்டார்.

டெல்லியில் உள்ள 70 தொகுதிகளிலும் 11 ஆயிரம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 630 ஓட்டுச்சாவடிகள் பதற்றமானவை என்று கண்டறியப்பட்டு இருந்ததால் பலத்த பாதுகாப்பு ஏற் பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

32,801 டெல்லி போலீசாருடன் 107 கம்பெனி மத்திய துணை நிலை ராணுவ வீரர்களும் ஓட்டுப்பதிவை கண்காணித்தனர். பெரும்பாலான தொகுதிகளின் ஓட்டுப்பதிவு இணையத் தளத்தில் நேரடி ஒளிப்பதிவு செய்யப்பட்டது.

மொத்தம் உள்ள 1.19 வாக்காளர்களில் 4 லட்சம் பேர் புதுமுக வாக்காளர்கள். அவர்கள் ஆர்வமுடன் வந்து தங்கள் முதல் வாக்கை பதிவு செய்தனர்.

இன்று மாலை 5 மணி வரை ஓட்டுப்பதிவு நடைபெறும். அதன் பிறகு மின்னணு எந்திரங்கள் ‘சீல்’ வைக்கப்பட்டு ஓட்டு எண்ணும் மையங்களுக்கு கொண்டு சென்று பாதுகாப்பாக வைக்கப்படும்.

8–ந்தேதி ஓட்டுக்கள் எண்ணப்படும். பகல் 11 மணிக்கெல்லாம் டெல்லியில் ஆட்சி அமைக்கப் போவது யார் என்பது தெரிந்து விடும்.

டெல்லியில் கடந்த 15 ஆண்டுகளாக ஆட்சியில் உள்ள காங்கிரஸ் பலத்த தோல்வியை சந்திக்கும் என்று கூறப்படுகிறது. அதிக தொகுதிகளில் பா.ஜ.க. வெற்றி பெறும் என்று கருத்துக் கணிப்புகளில் கூறப்பட்டது.

பா.ஜ.க.வை ஆட்சி அமைக்க விடாதபடி ஆம் ஆத்மி கட்சியும் கணிசமான தொகுதிகளை கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் 5 மாநில தேர்தல் முடிவுகளில் டெல்லி மாநில தேர்தல் முடிவை நாடெங்கும் உள்ள மக்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்.